படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு 500க்கும் மேற்பட்ட செவ்வாடை உடுத்திய பெண் நம்பிக்கையாளர்கள் தீச்சட்டி ஏந்தி வேண்டுதல் வழிபாடு

ஒசூரில் ஆதிபராசக்தி சக்தி பீடம் என்ற அமைப்பின் சார்பில் ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் கைகளில் வேப்பிலையுடன் தீச்சட்டிகளை ஏந்தி சென்று ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.

ஒசூர் தேர்பேட்டையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சியும், பால் குழியல் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக பெண் நம்பிக்கையாளர்கள் ஆதிபராசக்தி சக்தி பீடத்திலுள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நம்பிக்கையாளர்கள் கைகளில் தீச்சட்டிகளை ஏந்தியும், கஞ்சி கலசங்கள், பால்குடங்கள் ஆகியவற்றை எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வேப்பிலையுடன் தீச்சட்டி எடுத்த செவ்வாடை நம்பிக்கையாளர்கள் மூல தெருக்கள் வழியாக சென்று இறுதியில் கோவிலை சென்றடைந்தனர்.

அங்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பால் குழியலும் நடைபெற்றது. நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும், நோய் நொடிகள் விலக வேண்டும், அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்த தீச்சட்டி எடுத்து செல்லும் வேண்டுதல்கள் நடைபெற்றன.