படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டம் உனிசெட்டி மலை ஊரில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதமடைந்தன. சேதமான பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை

ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டம், உனிசெட்டி ஊரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் வீடுகளுக்கு கடந்த ஒரு சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேன்று திடீரென உயர் மின்சார அழுத்தம் ஏற்பட்டதால்  50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த கருனாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட விலையிலா தொலைக்காட்சி பெட்டிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொலைகாட்சி பெட்டிகள் பழுதடைந்து சேதமானது.  இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வீடுகளிலிருந்த மாவாட்டும் இயந்திரம், மிக்சி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மற்ற மின் பொருட்கள் இயக்கப்பட்டிருந்தால் அந்த பொருட்களும் அதிக அளவில் சேதமாகி இருக்கும்.

இதனால் வேதனையடைந்துள்ள ஊர் மக்கள் மின்சார வாரியம் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். மின் பொருட்கள் சேதமானால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.