படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே தமிழக எல்லையில் கார் அரசுப்பேருந்து மோதி தீவிபத்து : காரில் இருந்த இரண்டு பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஒசூர் அருகே ஒசூர் பெங்களுர் சாலையில் சந்தாபுரம் என்ற இடத்தில் கருநாடகா அரசுப்பேருந்தும் சொகுசு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வண்டிகளிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் தீயில் உடல் கருகி பலியாயினர்.

தமிழகத்தின் ஒசூர் பகுதியிலிருந்து கருநாடகா மாநில அரசுப்பேருந்து ஒன்று பெங்களுருவை நோக்கி சென்று கொண்டிருந்தது. விடிகாலை நேரத்தில் இந்த பேருந்து பெங்களுரு புறநகர் பகுதியான சந்தாபுரம் என்ற இடத்தில் சென்றபோது நான்கு வழிச்சாலையில் தடம் மாறி எதிரே ஒரு சொகுசுகார் வந்துள்ளது. அப்போது காரும் அரசுப்பேருந்தும் பயங்கரமாக மோதிக்கொண்டது.

இதில் இரண்டு வண்டிகளிலும் பயங்கரமாக தீ பிடித்துள்ளது. இதனையடுத்து அரசுப்பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். இதில் பயணிகள் சிலருக்கு இலேசான சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காரில் இருந்த இரண்டு பேரும் வெளியே வரமுடியாத அளவில் தீ பற்றி எரிந்தததால் காரினுள் மாட்டிக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நகழ்விடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த சூர்யா சிட்டி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு வந்து தீயணைப்புத்து துறை மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். காரில் கருகி உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடிகாலை நேரத்தில் நடந்த இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதகுறித்து சூர்யா சிட்டி காவல் நிலய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.