Two sand smuggling lorries seized near Soolagiri

2

According to police, sub inspector Yuvaraj, attached to Soolagiri police station, conducted vehicle check in Murasu Nadu @ Hosur – Krishnagiri NH and found two abandoned trucks loaded with river sand.

The police team seized both the vehicles and are in search for the drivers!!!

Public question, why the police have not arrested the owners of the trucks and conducted enquiry with them!

மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

சூளகிரி காவல் உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் கிருட்டிணகிரி – முரசு நாடு என்கிற ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுண்டகிரி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று முந்தைய நாள் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை ஆய்வு செய்தனர். அதில் 5 அலகு மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதே போல கொல்லப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை ஆய்வு செய்தனர். அதில் 5 அலகு மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த லாரியையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 லாரி ஓட்டுனர்களை காவலர்கள் தேடி வருகிறார்கள்.

காவல் துறை ஏன் லாரி உரிமையாளர்களை கைது செய்து விசாரிக்கவில்லை என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.