படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே கோட்டையூர் மலை ஊரில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு நடைபெறவிருந்த ஊர் அவை  (கிராமசபா) கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லததால் காத்திருந்த ஊர் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து ஆத்தரமடைந்த அவர்கள் ஊர் அவை கூட்டம் நடைபெருவதாக இருந்த இடத்தை விட்டு ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

நாடு முழுவதும் இன்று 72வது விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களில் ஊராட்சிகளில் மக்களின் குரைகளை தீர்க்கும் வகையில் அரசு அலுவலர்கள் தலைமையில் ஊர் அவை கூட்டங்கள் நடத்தப்பட்டுவது வழக்கம்.

இதில் ஊராட்சிகளுக்கு தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடும்.

ஒசூர் அருகே தளி ஒன்றியத்தில் உள்ள கோட்டையூர் மலை ஊரில் இன்று 72வது விடுதலை நாளை ஒட்டி ஊர் அவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை முதல் அரசு அலுவலர்கள் வருகைக்காக காத்திருந்த ஊர் மக்கள் அவர்கள் கூட்டத்திற்கு வராததால் கடும் ஏமாற்றமடைந்தனர்.

ஒரு கட்டத்தில் ஊர் அவை கூட்டத்தை புறக்கணித்து வீடுகளுக்கு கலைந்து செய்தனர்.

மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அரசு அலுவலர்கள் ஊர் அவை கூட்டத்திற்கு வராததால் நாங்கள் இந்த கூட்டத்ததை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என முழக்கங்களை எழுப்பினர்.