படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழக பதிவெண் கொண்ட வண்டிகளில் பெங்களூரு சென்று வந்த பலருக்கும் மன வேதனை மற்றும் மனதில் ஏற்படும் நீங்கா வடு என்னவென்றால், அங்குள்ள கண்ணட காவலர்கள் தமிழர்களை தமது எதிரியாக பாவித்து தம் இன வெறுப்பை நம் மக்கள் மேல் உமிழ்வதே…

இந்த கன்னட காவல் துறை உனராமல் இருப்பது என்னவென்றால், கன்னடர்கள் எவ்வித இன வேறுபாடும் தமிழர்களால் காண்பிக்கப்படாமல் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பதையே.

ஒசூர் அருகே வண்டி ஆய்வுச் சாவடியில் வண்டிகளை மடக்கி வசூல் வேட்டை : காட்டிலாகா மீது குற்றம்சாட்டும் கருநாடகா வண்டி ஒட்டிகள்.

ஒசூர் அருகேயுள்ள குந்துக்கோட்டை காட்டிலாகா ஆய்வக சாவடி வழியாக ஒகேனக்கல் மற்றும் பிலிகுண்டு பகுதிகளுக்கு செல்லும் கருநாடகா வண்டிகளை தடுத்து நிறுத்தி காட்டிலாகானர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் கருநாடகா வண்டி ஒட்டிகளும், சுற்றுலா பயணிகளும் துன்பம் அடைந்துள்ளனர்.

காவேரி ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் அதனை கண்டு இரசிக்க கருநாடகா மாநிலத்திலிருந்துமக்கள் தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் மற்றும் பிலிகுண்டுலு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

கருநாடகா மாநிலத்திலிருந்து ஒசூர், தேன்கனிகோட்டை, அஞ்செட்டி வழியாக ஒகேனக்கலை எளிதில் சென்றடையலாம். எனவே இந்த பகுதியின் வழியாக அதிக அளவில் பொதுமக்கள் வண்டிகளில் காவேரி ஆற்றுக்கு சென்று வருகின்றனர்.

ஒசூர் அருகே அஞ்செட்டி செல்லும் வழியில் குந்துகோட்டை ஊரில் காட்டிலாகா ஆய்வகச்சாவடி உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் அந்த பகுதியில் செல்லும் கருநாடகா மாநில வண்டிகளை குறிவைத்து தடுத்து நிறுத்தி வண்டிகள் குறித்த தகவல்களை எழுத சொல்லி பின்னர் அவர்களிடமிருந்த பணம் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் கருநாடகா சுற்றுலா பயணிகள் வண்டி ஒட்டிகள் கடும் தொல்லையடைந்து வருகின்றனர்.

ஆய்வகச் சாவடியை கடந்து செல்லும் வண்டிகளை தடுத்து நிறுத்தி சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்கள் யாராவது வண்டிகளில் உள்ளார்களா அல்லது மர்மபொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே இங்கு காட்டிலாகா மூலம் ஆய்வகச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக வண்டிகளில் செல்வோரிடம் பண வசூல் செய்வது மக்களை வேதனையளிக்க செய்துள்ளது.