படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

வில்சன் மரபணு குறைபாடு எனப்படும் மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபர் தேண்கனிக்கோட்டை வாலிபர் : இரண்டு குழந்தைகளை பறிகொடுத்து மூன்றாவது பிள்ளையை காப்பாற்ற தவிக்கும் குடும்பத்தினர்

ஒசூர் அருகே வில்சன் மரபணு குறைபாடு எனப்படும் அறிய மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த அவரது குடும்பத்தினர் இந்த வாலிபரை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டம், பிலிகுண்டுலு ஊரைச் (இந்த ஊரில் தான் காவிரி ஆறு கருனாடத்தில் இருந்து தமிழகத்தில் நுழைகிறது) சேர்ந்தவர் கந்தராசு. அப்பகுதியில் ஏரிகளில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மகன் அருண்குமார் கடந்த 11 ஆண்டுகளாக வில்சன் எனப்படும் மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த வில்சன் நோய் ஏற்கனவே இவருடைய தலை மகன் பால்ராச், மற்றும் மகள் அற்புதமேரி ஆகியோரது உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது இந்த நோய் தாக்கத்தில் உள்ள மகன் அருணின் உயிரை காப்பாற்ற கந்தராசின் குடும்பத்தினர் நாள்தோறும் போராடி வருகின்றனர்.

இந்த நோய்க்கு தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து வில்லைகளை போட வேண்டும். மீன் பிடித்து வாழும் கூலி வேலையை நம்பி வாழும் கந்தராசின் குடும்பத்தினர் வில்சன் நோய் தாக்கிய நேரத்தில் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொள்ள பணமில்லாத காரணத்தினால் நாங்கள் எங்களது குடும்பத்தில் இரண்டு உயிர்களை இழந்தோம். இப்போது எனது மகன் அருண்குமாரை காப்பாற்ற வேண்டி நாள்தோறும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் என கூறுகின்றனர்.

நெருங்கிய உறவின் முறையில் திருமணம் செய்துக்கொள்ளும் தம்பதிகளுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு இந்த அறிய மரபணு கோளாறு நோயான வில்சன் நோய் வர கூடுதல் வாய்பு உள்ளது.

நெருங்கிய உறவு முறை திருமணங்கள் அதிகமாக நடக்கு சப்பான் நாட்டில் வில்சன் நோய் முதல் முதலில் கண்டறிப்பட்டது.

இந்தியாவில் மட்டும் இந்த நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கு அதிகம் என கூறப்படுகிறது. 40,000 பேரில் ஒருவருக்கு இந்த நோய் வரவாய்ப்பு உள்ளது.

உள்ளூர் அரசு மருத்துவமனைகளில் வில்சன் நோய்க்கு சிகிச்சைகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் அருணின் சிகிச்சைக்காக கந்தராசின் குடும்பத்தினர் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து வருகின்றனர்.

சில நேரங்களில் சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் கடும் அவதிடையந்து வருகின்றனர்.

கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளதால் நிச்சயமாக இறைவன் தங்கள் மகனை காப்பார் என குடும்பத்தினர் வேண்டுதல் செய்து வருகின்றனர்.

வில்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உற்பத்தியாகும் செம்பு வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடும்.

wilson disease வில்சன் மரபணு குறைபாடு
wilson disease வில்சன் மரபணு குறைபாடு

பின்னர் ஈரல், குருதி, சிறு நீரகம், கண்கள், மூளை என அடுத்தடுத்த உறுப்புகள் பாதிக்கும்.

உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லையென்றால் இறப்பு உறுதி என்கிறார்கள் மருத்துவர்கள்.

வில்சன் நோயால் பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.