படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

யானைகளை வாழ விடுங்கள்… இந்த மன்னின் சொந்தக்காரர்கள் அவை… மனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள். மனிதர்களின் அத்துமீறலால் அழிவை சந்தித்து வரும் யானைகள்!

ஒவ்வோர் ஆண்டும் ஆகச்டு 12ஆம் நாள் உலக யானைகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

காட்டு வளங்களாக கருதப்படும் யானைகளை பாதுகாக்கும் வகையில், உலக யானைகள் நாள் ஆகச்டு 12ஆம் கொண்டாப்பட்டது.

உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, நம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. அதற்கடுத்தபடியாக ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற காடுகளின் யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

பெரிய உடலமைப்புடன் ஒய்யாரமாக ஆடி அசைத்து செல்லும் அதன் அழகே அழகு.

இந்நிலையில் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதும் இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல்கள் உருவாவதும் அதிகரித்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓசுர் சுற்றுப்புர பகுதிகளில் காட்டிலாக பொருப்பற்ற முறையில் செயல்படுவதால், யானைகள் சாலை விபத்தில் சிக்கி உயிர் இழப்பதும், பேராசை கொண்ட மனிதர்கள் யானை செல்லும் பாதைகளை ஆக்கிரமித்து அதில் மின் வேலி அமைப்பதாலும் யானைகள் செத்து மடிந்து வருகின்றன.

காட்டிலாகாவிற்கு ஆண்டு தோறும் யானைகளுக்கு காட்டுப்பகுதியிலேயே உணவளிக்கும் விதமாக அரசு பணம் ஒதிக்கினாலும், அவை தன்னலம் கொண்ட சில காட்டிலாகவின் மேல் பொருப்பில் உள்ளவர்களின் பேராசையால், யானைகளின் வயிற்றிற்கு உணவாகாமல் இந்த தன்னல பெரிச்சாளிகளின் வங்கிக்கு சென்று விடுகிறது.

யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதே அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்க தலயான செயலாக அமைந்துவிடுகிறது. அதேவேளையில் மனிதர்களின் பொருப்பற்ற செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கதையாகி வருவதாக காட்டு உயிரின ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய அதிரடி தீர்ப்பை அடுத்து நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 தங்கும் விடுதிகளுக்கு மூடி முத்திரை வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

ஓசூர் காட்டுப் பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கையை நீதி அரசர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுத்தால், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான உறவு இனிமையானதாக மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.