புகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்... இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க

புகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்... இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க

புகை பிடித்தலுக்கு அடிமையா நீங்கள்? தக்காளி சாப்பிடுங்க!

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என நன்கு அறிந்திருந்தாலும் புகை பிடித்தலுக்கு அடிமையானவர்கள் சிலர், அதை விட்டொழிக்க மனமில்லாமல் புகை பிடுத்துக் கொண்டே  இருப்பார்கள்.

அத்தகையவர்கள், ஆப்பிள் மற்றும் தக்காளி பழங்களை அதிகளவு உண்டு வந்தால் அவர்களின் நுறை ஈரல் பாதிப்பு சிறிது விலகும்.

இத்தகவல், ஐரோப்பிய மூச்சுசார் தாளிகை (European Respiratory Journal) -ல் வெளி வந்தௌள்ளது.

பொதுவாக 30 வயதை கடக்கும் யாவருக்கும், நுரையீரல் தனது செயல் திறனை இழக்க துவங்கும்.

வயது கடக்க கடக்க, அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு பாதிப்பின் தன்மை வேறுபடும்.

அதிகளவு பழம் சாப்பிட்டு வந்தால், புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பிலிருந்து ஓரளவேனும் காத்துவரும் என அமெரிக்க பால்டிமோர் மாநிலத்தில் உள்ள சான் காப்கிந்ச் பல்கலைகழகத்தை செர்ந்த வனெசா கார்சியா - லாசன் ஆகியோர் தமது தாளிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

புகை பிடித்தல் மற்றும் கடும் மாசு அடைந்த, நுண் தூசுகள் அடர்ந்த காற்று, இவற்றால், மூச்சுக் குழாய் படிப் படியாக சுறுங்கி, நுரையீரல் திசுக்களில் நோய் தொற்று ஏற்பட்டு, நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய் ஏற்படும்.

உலக உடல்நல அமைப்பானது (WHO), 2020-ஆம் ஆண்டிற்கு பின் உலகளவில் "நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய்", இறப்புகளுக்கெல்லாம் அடிப்படை நோயாயாக அமையும் என அறிவித்துள்ளனர்.

குறிப்பாக நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 90 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

ஆகவே, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாள் தோறும் அதிகளவில் தக்காளி, ஆப்பிள் பழங்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் நுரையீரல் திசு பாதிப்பு ஓரளவேனும் குறையும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: