வீட்டில் பூனை வளர்கிறீர்களா? உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்?

வீட்டில் பூனை வளர்கிறீர்களா?  உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்?

வீட்டில் பூனை வளர்கிறீர்களா? உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்?

வேட்டை விலங்காக பிறந்த பூனையை, நீங்கள் கொஞ்சும் விலங்காக மாற்ற நினைத்தால் அது முறையா?

நீங்கள் பூனை வளக்கிறீர்கள்... அது வீட்டினுள் எதையோ பிறாண்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை செய்யாதே என கடிந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் கோபத்தை அதன் மீது காட்டலாம்... ஆனால் அது மீண்டும் தான் செய்ததையே செய்யும்... ஏன்?

நீங்கள் சொல்வதை அது கவணிக்கவில்லை என்று பொருள் அல்ல. அதற்கு தனது இயற்கை குணத்தை தங்களுக்கு தக்கவாறு எப்படி மாற்றிக்கொள்வது என அதற்கு புலப்படவில்லை.

கொஞ்சி பிழைக்க அவை பிறக்கவில்லை

பூனைகள் காட்டில் வேட்டையாடி வாழ பிறந்தவை. தங்களிடம் கொஞ்சி பிழைக்க அவை பிறக்கவில்லை.

ஆக, உங்களிடம் கொஞ்சித் தான் பிழைக்க வேண்டும் என்ற மன நிலை இல்லாத நிலையில், அது தங்களிடம், தங்களின் குணத்திற்கு ஏற்ற வகையின் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் தன்மை அதனிடம் இல்லை.

பிறான்டாதே என்பதை நீங்கள் அதனிடம் அதட்டி சொல்வது, அதை பொறுத்த வரை அதை தாக்க வந்த பெரிய விலங்கு நீங்கள் என்றே அது உணரும்.

பூனையை இதை செய்யாதே அதை செய்யாதே என ஒவ்வொரு முறை நீங்கள் அதை மிறட்டும் போது, உங்கள் மீதான வெறுப்பையே அது தன் மணதில் வளர்த்துக் கொள்ளும்.

அதனால், அது மிகவும் மனமுடைந்து, மன அழுத்ததிற்கு ஆளாகி, தன் கோபத்தை தங்களின் மீது வெளிப்படுத்த முயலும்.

ஒவ்வொரு முறை, நீங்கள் அதன் இயற்கை குணத்தை மாற்ற அல்லது கண்டிக்க முயலும் போது, அது மேலும் மேலும் தங்களின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளும்.

அடிமைகள் அல்ல அவை

நாம் பல வகை மின்னனு பொருட்களை வீட்டினுள் பயன்படுத்துகிறோம். அவை எழுப்பும் ஒலிக்கு நாம் செவிடர்களாக இருக்கலாம்.

ஆனால், நாம் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் தங்களின் மின்னனு பொருள்களின் இரைச்சலை தாங்கி வாழ வேண்டும் என இயல்புடையவை அல்ல.

அவைகள் இயற்கை... இயற்கையே அவை... தங்களை போன்று செயற்கைக்கு அடிமைகள் அல்ல அவை.

ஆக, வீட்டில் நீங்கள் வளர்க்க முற்படும் விலங்கு அல்லது உயிரிணம், அந்த இரைச்சல்களால் மணம் நொந்து தங்களின் வீடு வாழ தகுதியற்ற இடம் என நினைக்கலாம்.

உங்களுக்கு புரிவதெல்லாம் விலங்கிற்கு புரியாது

மனிதர்கள் உருவாக்கியவை மனிதர்களுக்குத் தான் நன்கு புரியும். இயற்கை படைத்த உயிரிணங்களுக்கு, இயற்கையில் உள்ளவை மட்டும் தான் புரியும்.

பூனைக்கு உயரம் புரியும். ஆனால் நீங்கள் சாளரங்களுக்கு வைத்துள்ள கண்ணாடி புரியாது.

உங்கள் வீட்டினுள் இருந்து வெளியில் மாட்டையோ அல்லது ஆட்டையோ அல்லது நாயையோ பூனை பார்த்தால், ஏதோ தன்னை தாக்க வந்த விலங்கு தன் மிக அருகில் இருப்பதாக அது உணரும்.

அதனால் அது அச்சம் கொள்ளும். மேலும், அவை அத்தகைய சூநிலையில் உயரத்தை விரும்பும். உங்கள் வீட்டில் தான் நிதானமாக உயரமான இடத்தில் உட்கார்ந்து தன்னை சுற்றி நடக்கும் சூழலை கண்கானிக்க அது விரும்பும்.

தங்கள் வீட்டில் அத்தகைய உயரமான இடம் இல்லை என்றால் அது மண உழைச்சல் அடையும்.

உங்களை யாராவது ஓயாமல் தூக்கினால்?

ஒரு நொடி சிந்தித்து பாருங்கள். உங்களை ஒருவர் தனது பாச மிகுதியால் அடிக்கடி ஓயாமல் தூக்கி கொஞ்சிக்கொண்டே இருக்கிறார்.

உங்களை சிறிதளவும் சுற்றித்திறிய விடுவதில்லை. தன் மடியில் தூக்கி கிடத்திக்கொள்கிறார்...

உங்கள் மண நிலை எப்படியோ அப்படியே தங்களின் வளர்ப்பு உயிரினத்தின் மணது.

ஓயாமல் அதை தூக்கினால் அதற்கும் பிடிக்காது.

எங்களுக்கு பிடிக்காது, சொன்னா கேளுங்க

பூனைக்கு தன் வாலை யார் தொடுவது பிடிக்காது. வயிற்றுப் பகுதியை யாராவது தொட்டால் கொலை வெறியே வரும்.

பூனை தங்களின் மடியில் தானாக படுக்கிறது என்பதற்காக அதன் தலையை தடவுவது, முதுகை தடவுவது, தூக்கி கொஞ்ச முயல்வது... இது எதுவும் பிடிக்காது.

பூனை வேட்டை விலங்கு... உங்கள் அழகு பொம்மை அல்ல.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: