5G தொலை தொடர்பு தொழில் நுட்பம் நம் வாழ்கை முறையை மாற்றுமா?

5G தொலை தொடர்பு தொழில் நுட்பம் நம் வாழ்கை முறையை மாற்றுமா?

5G - நாண்காவது தொழில் புரட்சிக்கு வழி செய்யும். நம் அன்றாட வாழ்வு முறையையே மாற்றி அமைக்கும்.

இத்தகைய கருத்துக்களைத் தான் நாளது பொழுதும் 5G குறித்த ஆர்வத்தால் பல தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது கருத்தாக பல பயிலரங்குகளிலும், கருத்தரங்குகளிலும் சொல்லி வருகின்றனர்.

5G என்றால் என்ன என்று கூட மக்கள் இதுவரை அறியாத நிலையில், இந்த தொழில் நுட்பம் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில், நுகர்வோருக்கான மின்னனு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இப்போதே பல 5G தொழில் நுட்பத்துடன் கூடிய பொருட்களை சந்தைபடுத்தி வருகின்றனர்.

தொழில் நுட்பம் என்னவென்றே இன்னும் நடைமுறையில் இல்லாத பொழுது இவர்கள் எதன் அடிப்படையில் பொருட்களை 5G தொழில் நுட்பத்துடன் கூடியது என சந்தைபடுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியே...


5G தொலை தொடர்பு தொழில் நுட்பம் என்றால் என்ன?

உண்மையான 5G தொழில் நுட்பமானது, ஒரு வலைபின்னல் போன்று அமைக்கப்பட்ட நுண்ணகன் (Antenna) கட்டமைப்பை கொண்டதாகும்.

இதனால் அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய இயலும். கைபேசிகள், கருவிகள் என இத்துடன் இணக்கப்படுபொழுது தகவல் பரிமாற்றம் தற்பொழுது இருப்பதை விட பல மடங்கு விரைவாக இருக்கும்.

அடுத்த தொழில் வாய்ப்புகள் அனைத்தும் இந்த விரைவான தகவல் பரிமாற்றத்தை சார்ந்து உருப்பெறும்.

இந்த 5G தொண்டு மக்களிடம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வந்து சேரும்.


மிகைப்படுத்தியவை

5G குறித்து தற்போது சொல்லப்படும் கருத்துக்கள் பல மிகைப்படுத்தியவையாக உள்ளது. 3G தொழில் நுட்பம் சந்தைக்கு வந்த போதும் இவ்வாறான பல பிதற்றல்கள் பகிரப்பட்டு வந்தன.

நடைமுறைக்கு வந்திராத ஒன்றை குறித்து மிகவும் எதிர்பார்ப்பு கொண்டு ஏதாவது தொழில் முனைய முயல்வது அறிவுசார்ந்த செயலாக இருக்காது.


வேகம்.. வேகம் மட்டுமே!


தங்களின் கைபேசியில் ஒரு நொடிக்கு 10 கிகா பைட் வேகத்தில் தகவல் பரிமாற்றம்!!!

கைபேசியில் வேகம் ஒரு நொடிக்கு தற்பொழுது 3 மெகா பைட் என்ற நிலை உள்ளது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 1 கிகா பைட் என்பது 1000 மெகா பைட்டிற்கு சமம்.

குறைந்தது 4G வேகத்தை விட 600 மடங்கு கூடுதல்.

ஒரு முழு நீள அதி தெளிவு கொண்ட (4K) திரைபடத்தை பதிவிறக்க ஒரு சில விணாடி போது.


யாருக்கு இந்த வேகம்?

தொலைகாட்சிகளை நாம் இதன் மூலம் பார்க்கலாம்.

ஓட்டுநர் இல்லா தன்னாட்சி வண்டிகள் திறம்பட செயல்படும்.

மருத்துவ தொண்டு திறன்படும்.

நாம் அன்றாட பயன்படுத்தும் இணைய வசதியும் தகவல் தொடர்பும் மேலும் சிறந்து விளங்கும்.


விலை கூடுதலாக இருக்கும்

5G தொழில் நுட்பமானது மில்லி மீட்டர் அலைவரிசையில் செயல்படும். அதனால் அந்த அலைகளால் நீண்ட தொலைவிற்கு பயணிக்க இயலாது.

ஆக, இதற்கு கூடுதலான எண்ணிக்கையில் அலைபரப்பிகள் தேவை.

தொண்டு வழங்கும் நிறுவனங்கள் கூடுதலாக அலைபரப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும். பெரும் முதலீடு தேவை.

இவ்வளவு வேகமான இணைய இனைப்பு தேவை உள்ளவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பார்கள்.

முதலீட்டுற்கு ஏற்ற வகையில் வருமானம் ஈட்ட வேண்டுமானால், கட்டனங்கள் கூடுதலாக இருக்கு.

ஏக்கத்துடன் பொருத்திருப்போம்... நம் கையில் என்று 5G தொழில் நுட்பம் என்று!!!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: