தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை

தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை

Zero-Width SPaces (ZWSPs) - தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்..

இணையத்தில் தாங்கள், தங்களை பற்றிய தனிப்பயன் தகவல்களை (பிறந்த நாள், முழு பெயர், இருப்பிடம், முகவரி) பகிரும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பதிவிடவேண்டும்.

நீங்கள், உங்களை பற்றிய தகவல்களை பகிறும் இணையதளத்தின் உரிமையாளர்கள், தங்களை பற்றிய தகவல்களை கொண்டு தங்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளை திருடுவதற்கு பயண்படுத்தலாம்!

பொதுவாக, முழு தகவல்களையும் தங்களை துல்லியமாக அடையாளப்படுத்தா வன்னம் பதிவிடுங்கள். எடுத்துக்காட்டாக, முகநூலில் சரியான பிறந்த நாளை குறிப்பிடாதீர்கள்.

பிறந்த ஆண்டு 1990 என்றால், பிறந்த நாளை 01.01.1990 என்று குறிப்பிட்டால், தங்களின் தனிப்பயன் தகவல் சிறிதளவேனும் பாதுகாப்பாய் இருக்கும்.

கைபேசி அழைப்பில், எத்தகைய சூழலிலும், தங்களுக்கு வந்த குருஞ்செய்தி கடவுச் சொற்களை பகிறாதீர்கள்.

தங்களுக்கு வரும் மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை சொடுக்கி இணையதளங்கள், குறிப்பாக வங்கி ஈனையதளங்களுக்கு செல்லாதீர்கள்.

மைக்ரோ சாப்ட் அவுட் லுக்கை ஏமாற்றும் ஊடுருவலாளர்கள்

மீஉரை வரை குறி மொழி (HTML) குறியீடுகள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா இணய பக்கங்களிலும் அடிப்படையாக பயன்படுத்தப்படும், கணிணிகளை செயல்பட வைக்கும் ஒரு எழுத்து குறியீடு ஆகும்.

நீங்கள் ஒரு இணைய பக்கத்திற்கு, எடுத்துக்காட்டாக ஓசூர் ஆன்லைன் செல்ல வேண்டும் என்றால், அதற்காக <a href="https://hosuronline.com/">ஓசூர் ஆன்லைன்</a> என்ற குறியீடு உள்ளிடப்பட்டிருக்கும்.

இத்தகைய இணைய பக்க இணைப்புகளை நீங்கள் மைக்ரோ சாப்ட் அவுட்லுக் அல்லது G-மெயில் மின்னஞ்சலில் பெறும் போது, அவர்கள், பயணாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில், தமது சரிபார்ப்பு இணைய முகவரியை உள்ளிட்டு அனுப்புவார்கள்.


நீங்கள் மின்னஞ்சலில் பெறப்பட்ட இணைய பக்க இணைப்பை சொடுக்கும் போது, அந்த இணைப்பு, இவர்களின் சரிபார்ப்பு வழங்கிக்கு சென்று, பாதகம் ஏதும் இல்லை என்றால், தங்களை கொடுக்கப்பட்ட இணைய முகவரி பக்கத்திற்கு எடுத்துச்செல்லும். இல்லையேல், எச்சரிக்கை அறிவிப்பை காட்டும்.

இத்தகைய பாதுகாப்பு சிறப்புகள் இருந்தாலும், அதையும் ஏமாற்ற ஊடுருவலாளர்கள் பலவகையில் செயல்படுகிறார்கள்.

அகலமில்லா இடைவெளிகள் என்கிற Zero Width SPaces (ZWSPs)

மீ-உரை வரை குறி மொழியில் சொற்களுக்கு இடையில் ஒரு இடைவெளி ஏற்பட குறியீடு தேவை இல்லை, ஆனால், இரண்டு இடைவெளி தேவை என்றால், " &nbsp; "என்ற குறியீட்டை பயன்படுத்துவர்.

அகலமில்லா இடைவெளிகள் என்கிற Zero Width SPaces (ZWSPs) குறியீடுகளை பயண்படுத்தி அவுட்லுக் அல்லது G-மெயில் போன்றவற்றின் பாதுகாப்பு அம்சங்களை மீற முடியும் என கண்டறிந்து அவற்றை உடுருவலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.


Zero-Width SPaces (ZWSPs)


எச்சரிக்கை

ஆக, தொண்டு வழங்குபவர்கள் எத்தகைய எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஊடுருவலாளர்கள் அவற்றை ஏமாற்ற இரவும் பகலும் ஏமாற்று வழிகளை கண்டறிந்து நம்மை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

நாம் எச்சரிக்கையாக இணைய தளங்களில் செயல்படவில்லை என்றால், நாம் இணைய குற்றவாளிகளுக்கு இரையாவோம் என்பது உறுதி.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: