உங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா?

உங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா?

குவோல்காம் சில்லு உற்பத்தியாளர்கள் திறம்படுபேசியின் (SmartPhones) விலையை கண்டபடி ஏற்றி விற்க செய்கிறார்களா?

அமெரிக்க வணிக ஆணையமானது, நாம் வாங்கும் திறம்படுபேசிகள்  சிரியான விலை அல்லாமல் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக உணர்கிறார்கள்.

சாம்சங், நோகியா, ஆப்பிள் போன்ற திறம்படும்பேசி உற்பத்தியாளர்கள் இத்தகைய விலை ஏற்றத்திற்கு பொருப்பில்லை எனவும் அந்த ஆணையம் கூறுகிறது.

அப்படியானால், இந்த கூடுதல் விலைக்கு யார் பொருப்பு?

குவோல்காம் நிறுவனமே இந்த கூடுதல் விலைகளுக்கெல்லாம் பொருப்பு என அந்த ஆணையம் குற்றம் சாட்டுகிறது.

குவோல்காம், கைபேசிகள் மற்றும், திறம்படுபேசிகளுக்கான சில்லு உற்பத்தியில் முன்னனி வகிக்கிறது.

அந்த நிறுவனமே கிடத்தட்ட அனைத்து உயர் ரக திறம்படுபேசிகளில் பயன்படும் சில்லு மற்றும் அவை சார்ந்த தொழில் நுட்ப காப்புரிமைகளை தன் வசம் வைத்துள்ளது.

குவோல்காம் தனது சில்லுக்களை ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு விலையில் விற்று விடுகிறது.

பின்பு, தான் வைத்துள்ள காப்புரிமை அடிப்படையில் ஒவ்வொரு திறம்படுபேசி விற்கும் போதும் அதற்கு ஒரு உரிமைத்தொகை என்ற ஒன்றை விதிக்கிறது.

இந்த உரிமைத்தொகை, ரூபாய் 1500 முதல், விற்பனை விலையில் 5 விழுக்காடு என்று பல வகைகளில் விதிக்கப்படுகிறது.

கைபேசி உற்பத்தியாளர்கள், குவோல்காம் செய்வது முறையல்ல என்று ஆணயத்திடம் முறையிட்டுள்ளனர்.

மேலும் அவ்வப்போது, தங்களை குவோல்காம் அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாவிடில் சில்லு தர மாட்டோம் என மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

குவோல்கோம் சார்பில் இது தொடர்பாக கூறும்போது, ஆப்பிள் நிறுவனத்தாரே, 2013-ஆம் ஆண்டு வாக்கில், எங்களிடம், உங்களின் சில்லு மட்டும் பயன்படுத்துவோம், அதனால் விலை குறைத்து சில்லு வழங்குங்கள் என்று ஒப்பந்தம் போட்டனர். நாங்கள் அவர்களுக்கு தரைமட்ட விலையில் சில்லு வழங்கி வந்தோம்.

குவோல்காமின் மோலென்கொஃவ் மேலும், எங்களின் சில்லுக்களை பயன்படுத்தும் போது, அது தொடர்பான காப்புரிமைகளுக்கு உரிமைத்தொகை தரவேண்டும் என்பது தானே முறையானதாக இருக்கும், என்றார்.

நாங்கள் எமது வாடிக்கையாளர்களை கீழ்படுத்தி பார்பதில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

திறம்படு பேசிகளுக்கான சில்லு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிகொண்டே இருப்பதால், போட்டி கடுமையாக உள்ளது.

உண்மையில், திறம்படுபேசிகளின் விலை 2011 முதல் கீழ் இறங்கி வருகிறது.

குவோல்காமின் விற்று வருவாயும் குறைந்தே வருவதால், அவர்களின் செல்வங்களும் குறைந்தே வருகின்றது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: