செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்

செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்

ஒற்றை ஆடி கண்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சிறந்த பார்வை திறனை தருகிறது.

ஆனால், கூட்டுக்கண்கள், பூச்சிகள் மற்றும் நண்டு-நத்தை போன்ற கட்டித்தோலுடைய உயிரிணங்களுக்கு அசைவுகளை உணர்வத்ற்கும், மங்கலான அல்லது பகீர் ஒளியிலும் பார்ப்பதற்கும், கூடுதல் சுற்றுவட்டாரத்தை பார்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது.

ஆகையால், அறிவியலாளர்கள், செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

எந்திரன் மற்றும் தானியங்கி வண்டிகளுக்கு கூட்டுக்கண்கள் பயன்படுத்துவதே சிறந்தது என முடிவெடுத்துள்ளனர்.

எவ்வாரு மலிவான வகையில் செயற்கை கூட்டுக்கண் உற்பத்திசெய்வது என்பதை விளக்கும் கட்டுரை வெழியிடப்பட்டுள்ளது.

தனித்தனியாக செயல்படத்தக்க சிறு சிறு பார்வை உணர்பொறிகள் கொண்டு உறுப்பெற்றிருப்பதே கூட்டுக்கண்கள்.

ஒவ்வொரு பார்வை உணர்பொறியும் தனி தனி ஆடிகள், விழிவெண்படலம் மற்றும் ஒளியேற்பி அனுக்களை கொண்டுள்ளன.

சிலவகை பூச்சிகளின் கூட்டுக்கண்களில் இத்தகைய அனுக்களின் எண்ணிக்கை பல ஆயிரம் அலகுகள் என்ற வகையில் இருக்கும்.

ஆய்வகத்தில் கூட்டுக்கண்களை வடிவமைப்பது என்பது பெரும் பொருளாதார செலவு கொண்டதாக இருக்கிறது.

அதனால், இதுவரை, இயற்கை கூட்டுக்கண்களுக்கு ஒப்பீடாக செயற்கை கண்கள் வடிவமைப்பது பின்னமாகவே உள்ளது.

சில அறிவியலாளர் குழுக்கள், கிளர்கதிர் ஒளிமி (LASER) மற்றும் நுன் தொழில்நுட்பம் கொண்டு செயற்கை கண்களை கூட்டாக செய்ய முற்படுகின்றனர்.

ஆனால் அவை கட்டமைப்பில் ஒழுங்கற்று, சிதைவுற்று, பார்வை திறனில் விட்டுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்பொழுது அறிவியலாளர் வென்சுன் வாங் மற்றும் அவருடன் பணி செய்வோர் புதிய திட்டமுறை ஒன்றை வகுத்துள்ளனர்.

இது கட்டமைப்பில் சீரான தன்மையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படியாக, ஆய்வாளர்கள் இரண்டடுக்கு அக்ரலிக் கண்ணாடிகளின் ஊடே கிளர்கதிர் ஒளிமியை கீழ் அடுக்கிற்கு பாய்ச்சி, அதனால் கீழ் அடுக்கு வீக்கமடைந்து குவி கும்மட்ட அமைப்பு உருவாக்கியுள்ளனர்.

ஆய்வாளர்கள் இத்தகைய சிறிய ஆடிகளை வரிசையாக உருவாக்கி அவை தாமாகவே வளைந்து ஒரு செயற்கை கண்ணாடி வடிவுபெறச் செய்துள்ளனர்.

அடுத்ததாக, பல அடுக்கு செயல்பாட்டினால், நுண்கட்டுமானங்களை குவி ஆடியின் மும்மட்ட வடிவின் மேல் ஒரு விரிப்பிற்கு ஒப்பானதாக உருவாக்கியுள்ளனர்.

இந்த நுண்கட்டுமானங்கள் சிறு ஆடிகளுக்கு ஒத்து பிரதிபலிப்பில்லாத தண்ணீர் எதிர்பு கொண்ட ஒன்றின் தன்மையுடன் உள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: