திறன் மின் ஆளி என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்

திறன் மின் ஆளி என்றால் என்ன?  உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்

திறன் மின் ஆளி (Smart Switch) என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின் பொருள் கட்டுப்பாட்டு கருவி!!!

திறன் மின் ஆளி என்பது புதியவகை ஆளிகள். அவற்றைக்கொண்டு, நீங்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நீங்கள் கட்டுப்படுத்து நினைக்கும் மின் பொருளை, தங்களின் இணைய வசதியை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

இந்த திறன் மின் ஆளி - கள், அருகலை (WiFi), அதாவது கம்பியில்லா தகவல் பரிமாற்ற நுட்பம் கொண்டு செயல்படுகின்றன.

இத்தகைய மின் ஆளிகள், அமேசானின் அலெக்சா அல்லது கூகிளின் கோம் ஆகியவற்றின் குரல் கட்டுப்பாட்டு வசதி மூலமும் செயல்படும்.


திறன் மின் ஆளி - பயன்கள்

திறன் மின் ஆளி எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றால் நமக்கு என்ன பயன் என்பதை தெரிந்துகொள்ள, முதலில் அவற்றின் சிறப்புகளையும் பயன்களையும் பார்க்கலாம்.

ஏற்கனவே திறன் மின் விளக்குகள் சந்தையில் உள்ளன. வில்லை சற்றே கூடுதல், அந்த விளக்கு பழுதானால், நாம் மீண்டும் அத்தகைய திறன் விளக்குகளை வாங்க வேண்டி வரும்.

ஆனால், திறன் மின் ஆளிகள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் மின் விளக்குகளுக்கு பொருத்தி விடலாம். நமது மின் விளக்கு பழுதானால், அதை மட்டும் மாற்றினால் போதும். மேலும், இந்த ஒரு திறன் ஆளியை கொண்டு ஒரே நேரத்தில் மேலும் சில மின் பொருட்களை இயக்க வேண்டும் என்றால் அத்தகைய வேலையையும் செய்யலாம்.

செயலிகள் மூலம் கட்டுப்படுத்துதல்

பொதுவாக, திறன் ஆளிகள், திறன் பேசிகளில் நிறுவத்தக்க செயலிகளால் கட்டுப்படுத்தும் வகையில் விற்கப்படுகின்றன.

இதனால், பயனர், தொழில் நுட்பம் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் என்பது இல்லை. ஒரு செயலியை கொண்டு பல திறன் ஆளிகளை கட்டுப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்றால், தாங்கள் பயனிக்கும் இடத்தில் இருந்தே, வீட்டு வாயிலின் விளக்குகளை, தோட்டத்து விளக்குகல... இன்னும், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலைகளை செய்ய இயலும்.

நீங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு மாலையில் வெளியில் செல்கிறீர்கள் என்றால், தொலைகாட்சி பெட்டியை தங்களின் திறன் பேசி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது தாங்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று என்னுகிற நேரத்தில் அமர்த்தியோ அல்லது செயல் படுத்தவோ செய்யலாம்.

நீங்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே காற்றுப்பதனி (Air Conditioner) யை இயக்கோ அல்லது நிறுத்தவோ இயலும்.

நேர அட்டவணையின் படி செயல்பாடு

திறன் ஆளிகளை தங்களின் கைபேசி செயலியின் மூலம், தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்க வைக்க இயலும். ஆக, விளக்குகளை, அல்லது ஏதாவது ஒரு மின் பொருளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்க விரும்பினால், அவற்றை செயலிகளில் முன் கட்டளை நிரல் இட்டு வைத்துவிட்டால், எல்லாம் தானாக இயங்கும்.

விலை

இத்தகைய திறன் மின் ஆளிகள், மிகவும் சொற்ப விலையில் கிடைக்கின்றன. விலை ரூபாய் 500 முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிகழ்நிலை (Online) இணையதளங்களில் கிடைக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: