உணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.

உணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.
மின் தோல் எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட, உணரும் தன்மை கொண்ட மின் தோல்

மனித தோலில் பல நுண்வுணர்வு நரம்புகள் உள்ளன. அவை, அழுத்தம், வெப்ப நிலை மற்றும் பலனுணர்வு ஆகியவற்றை உணரும் தன்மை கொண்டவை.

எந்திரங்களும் இத்தகைய உணர்வுகள் தேவை என்றால், மனித தோல் போன்ற ஒன்றால் அவையும் மூடப்பட வேண்டும்.

அறிவியலாளர்கள், இத்தகைய தோலை உருவாக்க, மின் தோல் ஒன்றை முயன்று வருகின்றனர்.

மிக மெல்லியதான, நீட்டு தன்மை கொண்ட மின் தோலை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆய்வாளர்கள் அறிக்கை இட்டுள்ளனர்.

இந்த தோல் பல வகைகளில் மனித - எந்திர உரவாடல்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மின் தோல் பயன்கள்

எந்திரன், செயற்கை உடல் உறுப்புகள், அனிந்துகொள்ளும் உடல் நல கண்காணிப்பு கருவிகள் மற்றும் மெய்நிகர் உண்மை ஆகியவற்றில் இந்த தோல்கள் பயன்படும்.

பெரும் சவால்

இத்தகைய தோலை உருவாக்குவதில் பெரும் சவால் என்னவென்றால், அவை மின் சுற்றிகளை கொண்டதாகவும், அதே வேளையில் மிக மில்லியதாகவும், நீட்டும் தன்மை கொண்டதாகவும், முப் பரிமாண பரப்புகளுக்கு மேல் படறத்தக்கதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும். அசைவுகளுக்கு ஈடு கொடுப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

சில அறிவியலாளர்கள், நெகிழும் தன்மை கொண்ட "மின்னனு பச்சைகுத்தல்" முறையை பயன்படுத்த முயல்கிறார்கள்.

அனால் அவற்றின் உற்பத்தி மிக நிதானமாகவும், செலவு கூடுதலாகவும், அதேவேலையில் தூய்மை மிகு உற்பத்திகூடங்களில் மட்டும் செயல்படுத்த்ட இயலும் ஒளி கல்லச்சு வரைவியல் முறைகளை பின்பற்றுவதாக இருக்கிறது.

புதிய முயற்சி

ஆகவே, அறிவியலாளர்கள், விலை குறைவான, அதே வேளையில், எத்தகைய சூழலிலும் உற்பத்தி செய்யத்தக்க மெல்லிய படலத்தில், மின் சுற்றிகள் கொண்டு ஒருங்கிணைத்த நுண்-மின்னனு முறையை கையாள முயல்கிறார்கள்.

இந்த புதிய முயற்சியில், ஆய்வாளர்கள், மின் சுற்றி படிம அச்சு ஒன்றை மின் பச்சைகுத்தல் தாளில் சாதாரன கிளர்கதிர் ஒளிமி அச்சு இயந்திரம் கொண்டு அச்சிட்டுள்ளனர்.

இந்த புதிய முயற்சியில், ஆய்வாளர்கள், மின் சுற்றி படிம அச்சு ஒன்றை மின் பச்சைகுத்தல் தாளில் சாதாரன கிளர்கதிர் ஒளிமி அச்சு இயந்திரம் கொண்டு அச்சிட்டுள்ளனர்.

அதன் மேல் வெள்ளியால் ஆன பசை கொண்டு அச்சு வடிவத்தின் மீது மட்டும் தடவி அந்த படிம அச்சை உருவாக்கியுள்ளனர்.

அந்த வெள்ளி பசை மீது காலியம்-இன்டியம் (gallium-indium) உலோகக்கலவை நீர்மத்தை படிவமாக்கி, நீட்டு தன்மையும், இழு தன்மையும் அதே வெளையில் மின் கடத்தியாக செயல்படும் மின் சுற்றி படிம அச்சை உருவாக்கியுள்ளனர்.

மேலும் மின் சில்லுக்களை காந்த பொடி துகள்கள் கொண்ட மின் கடத்தும் தன்மையுடைய ஒட்டிகள் பயன்படுத்தி ஒட்டியுள்ளனர்.

ஆய்வாளர்கள், தாங்கள் இந்த முறையில் உருவாக்கிய மின் பச்சைகுத்தல் வடிவத்தை பல பொருட்களின் மேல் படர்த்தி செயல்முறைகளை காட்டியுள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: