பொத்தோஸ் ஐவி - மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று தரும்

பொத்தோஸ் ஐவி - மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று தரும்

நல்ல காற்று தரும் பொத்தோஸ் ஐவி (Pothos Ivy) என்கிற மணி பிளாண்ட்!

மணி பிளாண்ட் - காசு தரும் செடி என்கிற நிம்பிக்கையில், நம்மில் பலர் அதை நம் வீடுகளில் வளர்க்கிறோம்.

அந்த செடி காசு தரும் என நம்புவது மூட நம்பிக்கை, ஆனால் தூய்மையான காற்று தரும் என்பது அறிவியல் சான்று.

உள்ளாட்சிகளால் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரில் குளோரின் கலந்து தரப்படும் என்பது எல்லோரும் அறிந்த தகவலே.

அந்த குளோரினில் இருந்து சிறுக சிறுக குளோரோபாம் வெளிப்படும். அந்த குளோரோபார்மை நாம் தொடர்ந்து நம் மூச்சுகாற்றில் கலந்தால் அது புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

நம் வீடுகளின் அடுப்பறையில் பயன்படுத்தும் LPG காற்றிலிருந்து பென்சீன் காற்று வெளிப்படும். அந்த பென்சீனும் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

இந்த குளொரோபார்மையும் பென்சீனையும் வடிகட்டுவதற்கு மணி பிளாண்ட் வடிகட்டியாக செயல்படுகிறது.

இந்த நச்சுக்களை அவை உள்வாங்கி தனது வளர்ச்சிக்கு அவை பயன்படுத்திக்கொள்வதால் நம் வீடு நச்சுக்காற்றுகளில் இருந்து விடுபடுகிறது.

மேலும், இந்த மணி பிளாண்டுகள் நம் நாடு போன்ற வெப்பச் சூழலில் பூப்பது இல்லை. அதனால் இந்த செடியை வீட்டினுள் வளர்பதால் மகரந்த ஒவ்வாமை உடையவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

அறிவியலாலர்கள் இந்த செடியின் மரபணு அமைப்புகளை மாற்றி இன்னும் இது சிறந்த நச்சு காற்று வடிகட்டியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: