கடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்

கடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்

கடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர் பெறுவதே ஒரே வாய்ப்பாக இருக்கும்.

வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில், உலகளவில் சுமார் 200 கோடி மக்கள் நல்ல தண்ணீருக்கான ஆதாரம் இன்றி தவிப்பார்கள் என கணக்கிடப்படுள்ளது.

இத்தகைய தண்ணீர் பற்றாக்குறையை நீக்க வேண்டுமானால், கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதே வாய்ப்பாகும்.

இன்றைய சூழலில், இவ்வாறு கடல் நீரை உப்பு நீக்கி நல்ல தண்ணீராக மாற்ற வேண்டுமானால், இப்போது ஆறு போன்றவற்றீல் இருந்து தண்ணீர் வழங்குவதற்கான செலவில் இருந்து சுமார் 1000 மடங்கு கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும்.

கடல் நீரிலிருந்து குடி நீர்

இத்தாலியில் உள்ள பொலிடெக்னிகோ டி டோரினோ கல்லூரியை சேர்ந்த பொறியாளர்கள் ஞாயிறு ஆற்றலை பயன்படுத்தி குறைந்த செலவில் கடல் நீரை வடிகட்டி நல்ல தண்ணீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

இவர்களின் தொழில்நுட்பமானது செடிகள் பயன்படுத்தும் அடிப்படை நுட்பத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

செடிகள் நீரை தமது வேரினால் எடுத்து அதை இலைகளுக்கு நுண்துளை ஈர்ப்பாற்றல் மற்றும் நீராவிப்போக்கு முறையில் அனுப்புகின்றன.

நீர் உந்திகளை பயன்படுத்தாமல், சிறு துவாரங்கள் கொண்ட மிதக்கும் கருவியினால் கடல் நீரை உறிஞ்சி ஞாயிறு ஆற்றலால் நீரை ஆவிகாக்கி, அதிலிருந்து உப்பை நீக்கியுள்ளனர்.

இத்தகைய நுட்பங்களை கடலில் வாழும் மற்றும் கடல் அருகே வாழும் செடிகள் பயன்படுத்திகின்றன என்று பொரியாளர்கள் மாட்டியோ பாசனோ மற்றும் மாட்டியோ மொர்சியானோ ஆகியோர் விளக்கியுள்ளனர்.

இப்பொழுதுள்ள கடல் நீர் உப்பு நீக்கு இயந்திரங்கள், விலை கூடுதலான உந்திகள், கட்டுப்பாட்டு கருவிகள், மின் பொருட்கள் மற்றும் எந்திர கருவிகளை பயன்படுத்துகின்றன.

ஆனால், புதிய வடிவமைப்பானது, தானே இயங்குகிற தன்மை கொண்டது. ஆகவே செயல்படுத்த எந்த செலவும் பெருமளவில் இருக்காது.

தற்பொழுது, இந்த புதிய கருவியினால், ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள மிதவை கொண்டு நாள் ஒன்றிற்கு 20 லிட்டர் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்ய இயல்கிறது.

பொறியாளர்கள், ஞாயிறு ஆற்றலை இன்னும் திறம்பட மேம்படுத்தி பயன்படுத்துவது குறித்து ஆய்வில் உள்ளனர்.

அவ்வகையில் வெற்றி பெற்றால், ஞாயிறு ஆற்றல் கிடைக்கப்பெரும் கடல் பரப்புகளில் இந்த மிதவைகளை நிறுவி பெருமளவு நல்ல தண்ணீருக்கான ஆதாரத்தை பெருக்க இயலும்.

சென்னை போன்ற இடங்களுக்கு இது சிறப்பான தீர்வாக அமையும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: