விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்

விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்

உயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறியை நாம் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.

ஆட்டு கறியை அல்லது கோழிக் கறியை இப்பொழுதுள்ள முறைப்படி அவற்றை கொன்று எடுக்காமல், கறி இனி ஆய்வகக் கூடங்களில் உயிரி நகலாக்க முறையில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தை படுத்தப்படும்.

உயிரி நகலாக்க நுட்பத்தை பயன்படுத்தி, சதை அனுக்களை பெருகச் செய்து அதன் மூலம், நமக்கு தேவையான கறி வகைகளை உற்பத்தி செய்துள்ளனர்.


மீத்தேன் - பைங்குடில் வளிமங்கள்

இத்தனால், உயிர்களை நாம் கொல்ல வேண்டி இருக்காது. மேலும், ஆடு, கோழி, மாடு போன்ற உயிர்கள் கறிக்காக வளர்க்கும் போது அவை இடும் எச்சத்தில் இருந்து மீத்தேன் காற்று வெளிப்படுகிறது. இந்த மீத்தேன், பைங்குடில் வளிமங்களில் தலையான காற்றாக உள்ளது.

ஆக, ஆய்வகங்களில் கறி உற்பத்தி செய்யப்படும் பொழுது, பூமியை வெப்பமடையச்  செய்யும் மீத்தேன் காற்று வெளியிடப்படுவது குறைந்துவிடும்.


உயிரி நகலாக்க முறை பயன்கள்


தொடைக்கறி, கழுத்துக்கறி, நெஞ்சுக்கறி என நமக்கு எது தேவையோ அதை மட்டும் ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதை மட்டும் தனித் தனியாக சந்தை படுத்தலாம்.

மேலும், உடும்பு, மான், மயில் என எந்த தடை செய்யப்பட்ட உயிரின கறியையும், அவற்றின் ஒரு சிறு மெல்லிய சதை பகுதி கிடைத்துவிட்டால், அதைக்கொண்டு எவ்வளவு கறி தேவையோ அதை நாம் உற்பத்தி செய்ய இயலும்.  இதனால், கள்ளத்தனமாக, இந்த உயிர்களை மக்கள் அழித்து வருவது தடைபடும்.

உயிர்களை கொன்று நேரடியாக கறி பெறும்போது, அவற்றின் நோய் நம்மை தாக்கலாம், ஆனால் உயிரி நகலாக்க முறையில் உற்பத்தியாகும் கறிகளில் இத்தகைய நோய் தொற்றுக்கள் இருக்காது.

மாட்டுக் கறி அரசியலுக்கும் வழி இருக்காது.

உயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறியை நாம் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.


ருசி

தற்பொழுது, உயிரி நகலாக்க முறையில் உற்பத்தியான கறியின் மாதிரிகள் சில உணவு விடுதிகளில் சமைக்கப்பட்டு அவை மக்கள் ருசி பார்க்க கொடுக்கப்பட்டது.

மக்கள் அவற்றை ருசித்து பார்த்துவிட்டு, தங்களுக்கு கொன்று எடுக்கப்படும் கறியின் ருசி தன்மைக்கும், இந்த ஆய்வுக்கூட கறிக்கும் எந்த வேறுபாட்டையும் உணர முடியவில்லை என கருத்து தெறிவித்துள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: