இந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்

இந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த பொறிகருவிகளாக பார்க்கப்படும் இந்த பொறிகருவிகள் குறித்து நாம் தெறிந்துவைத்துக் கொள்வோம். [caption id="attachment_16888" align="alignleft" width="288"]வித்திங்ஸ் மூவ் Withings Move வித்திங்ஸ் மூவ் Withings Move[/caption] வித்திங்ஸ் மூவ் என்கிற கையில் அணிந்துகொள்ளத்தக்க இந்த மணிகாட்டி நமது இதயத்துடிப்பை தொடர்ந்து கண்கானித்து இதய மின்னலை வரைவை தருகிறது. அதன் மின்கலன் சுமார் 18 திங்கள்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால், அடிக்கடி மின் ஏற்ற வேண்டும் என்ற தேவை இல்லை. இதய மின்னலை வரைவு மட்டுமல்லாது, நாம் உடல் பயிற்சி மேற்கொள்ளும் போது, நமக்கு தேவையான புள்ளிவிவரங்களையும் அது தரும். னாம் தூங்கும் போது, நமது தூக்க முறையையும் நமக்கு வரைவு படுத்திக் காட்டும். இதன் விலை சுமார் ரூபாய் 4000 மட்டுமே.

பெட்டர் சிலீப் டியூனர் Beddr SleepTuner பெட்டர் சிலீப் டியூனர் Beddr SleepTuner

பெட்டர் சிலீப் டியூனர் என்ற சிரிய பொறி கருவியானது, ஆப்பிள் செயலியுடன் சந்தைபடுத்தப்படுகிறது. விலை சுமார் ரூபாய் 10,000. இந்த பொறியை நாம் நம் நெற்றியில் பொருத்திக்கொள்வதன் மூலம்,

  • நமது தூக்கம் எவ்வாராக அமைந்தது.
  • எத்தனை முறை நாம் மூச்சு விட மறந்தோம்.
  • நாம் எந்தப் பக்கம் ஒருக்கழித்து அதிக நேரம் படுத்திருந்தோம்.
  • நமது இதயம் எவ்வாறாக துடித்தது.
  • நாம் சரியான அளவு உயிரிய காற்றை மூச்சில் பயன்படுத்தினோமா என்பன உள்ளிட்ட பல தகவல்களி தரும்.

லினோவா திறன் வரைப்பட்டிகை Lenova smart tablet லினோவா திறன் வரைப்பட்டிகை Lenova smart tablet

லினோவாவின் திறன் வரைபட்டிகையானது, அமேசான் அலெக்சா வசதியுடன் வருகிறது. இது, தங்களின் வீட்டில் உள்ள திறன் கட்டுப்பாட்டு கருவியாக செயல்படும். சிறந்த காட்சித்திரையும், சிறப்பான ஒலிபெட்டியாகவும் இது செயல்படும். விலை ரூபாய் 21,000

சூன்டோ 9 Suunto 9 சூன்டோ 9 Suunto 9

சூன்டோ 9 பரோ ரூபாய் 53,000 என்ற விலை பட்டியலுடன் வருகிறது. இதன் பியூசுடு டிராக் நுட்பம், பூளோக நிலைப்படுத்துதல் செயற்கைகோள் (GPS) மற்றும், தன்னகத்தே உள்ள உணர்விகள் மூலம் மின்கலத்தின் பயன்பாட்டை குறைத்து, ஒரு முறை மின் ஏற்றினால், மின்கலம் சுமார் 120 மணி நேரம் வரை நீடித்திருக்கும் வகையில் செயல்படுத்துகிறது. இந்த கையில் அணிந்து கொள்ளத்தக்க மணிகாட்டியானது, மலையேறுதல், காட்டுவழி பயணித்தல் போன்ற வீர தீர செயல்களின் போது, தங்களின் இருப்பிடம், தாங்கள் பயணிக்க இருக்கும் தொலைவு ஆகியவற்றை துல்லியமாக காட்ட உதவுகிறது.

ஸ்பெக்டிரம் Specdrums ஸ்பெக்டிரம் Specdrums

பீரோ-வின் ஸ்பெக்டிரம், விரல்களில் மாட்டிக்கொள்ளும் வகையிலும், நீங்கள் இதைக்கொண்டு எந்த நிறத்தை தொடுகிறீர்களொ அதற்கேற்ப ஒலியை ஏற்படுத்தும். இதைக்கொண்டு இசையை மீட்கலாம். இந்த வளையங்கள் ஒற்றையாகவோ அல்லது இரண்டாகவோ கிடைக்கிறது. இதை வைத்து எதை தொட்டாலும் இசைதான்... நீங்கள் தொடுவது மிதியடியாகக்கூட இருக்கலாம். விலை ரூபாய் 5000   லிட்டெர் ரோபோட் 3 கணெக்ட் - பூனை வளர்கிறீர்களா? ரூபாய் 40,000 மட்டும் செலவு செய்தால், தானே பூனையின் எச்சங்களை எடுத்து பொட்டலம் கட்டும் எந்திர கழிவறை கிடைக்கும்.

நீங்கள் வீட்டில் இல்லாதபோது, தங்களின் பூனை இந்த கழிவறையை பயன்படுத்தினால், தான் அந்த எச்சத்தை கட்டி தங்களின் வருகைக்காக வைத்துள்ளதாக தங்களின் திறன் பேசிக்கு தகவல் அனுப்பும்.

ஜேபட்ஸ் JBuds ஜேபட்ஸ் JBuds

ஜேபட்ஸ் ஏர் ட்ரூ - விலை 3500 மட்டுமே. ஆப்பிளின் ஏர்போட்ஸ்-க்கு மாற்றாக கிடைக்கும், வடங்கள் அற்ற காதில் மாட்டிக்கொள்ளும் ஒலிகேட்பிகள் இந்த ஜேபட்ஸ்.  

ஃபைட்காம்ப் FightCamp ஃபைட்காம்ப் FightCamp

குத்துச்சண்டையில் ஆர்வமா? இந்த ஃபைட்காம்ப் உடற்பயிற்சி கூடத்தை வீட்டில் ரூபாய் 75,000 செலவில் அமைத்துக்கொள்ளுங்கள். உங்களின் உடற்கட்டை நீங்களே பார்த்து அசந்துபோவீர்கள்  

ரேசர் டுரெட் எக்ஸ் பாக்ஸ் Razer Turret Xbox ரேசர் டுரெட் எக்ஸ் பாக்ஸ் Razer Turret Xbox

ரேசர் டுரெட் எக்ஸ் பாக்ஸ் - விசைப்பலகை, கணிணி விளையாட்டிற்கான, மைக்ரோ சாப்டினால் ஆதரவளிக்கப்பட்ட விசைப்பலகையாகும். படுக்கையில் ஓய்வெடுத்துகொண்டே விளையாட சிறந்த விசைப்பலகையாகும். விலை சுமார் ரூபாய் 20,000 மட்டும்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: