சப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன?

சப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன?

சப்பான் நாடு நில அதிர்சிகளை தாங்கி நிற்கத்தக்க பல உயர் கோபுர கட்டிடங்களை கொண்ட நாடாகும். அவற்றின் கமுக்கம், அவை தரையுடன் சேர்ந்து நடனமாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே!

உயர் கோபுர கட்டிடங்கள்
தோக்கியோ, ஒசாக்கா மற்றும் யோக்ககாம ஆகிய பேரூர்கள், வான் உயர் கட்டிடங்களுக்கு பெயர் பெற்றவை. அவற்றை அன்னாந்து பார்க்கும் போது அவை அசைய இயலாத, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோபுர கட்டிட அமைப்புகள் என தோன்றும். சப்பானிய பேரூர் வாழ்க்கை முறையில் இத்தகைய கட்டிடங்கள் ஒன்றன கலந்துவிட்ட நிலையில், அவை அந்த ஊர்களின் உலகளாவிய வளர்ச்சியை எடுத்துக்கூறுவதாக அமைகிறது. பெரும் மக்கள் திரள்களும், வண்டி போக்குவரத்தும், இந்த கட்டிடங்களை தாண்டி செல்லும் போது, இந்த கட்டிடங்கள் அமைதியாக அசைவற்று இருக்கின்றன.

உண்மையில், நில அதிர்ச்சி ஏற்படும் போது தான், இந்த உயர் கோபுர கட்டிடங்கள் அசையாமல் இருப்பதாக நாம் நினைப்பது வெறும் மாயை என்பது புலப்படும்.

பசிபிக் எரிமலை வளையம்
சப்பான் தீவுக்கூட்டம், யூரேசியா, பிலிப்பைன் மற்றும் பசிவிக் தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்புகள் ஒன்று கூடும் இடத்தில் அமைந்திருக்கிறது.

இந்த பகுதியை பசிபிக் எரிமலை வளையம் என்று அழைக்கின்றனர். ஒவ்வோறு தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பும் தனித்தனியே அசைந்து கொடுக்கும் போது, சில நேரங்களின், ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும்.

சில நேரங்களில் உன்றன் மேல் ஒன்றாக தாவிக்கொண்டு அழுத்தத்தை வெழிப்படுத்தும். பின்பு விலகும். இவற்றில் எது நடந்தாலும், சப்பான் நாட்டில் நில அதிர்ச்சியை ஏற்படுத்தும். பல நேரங்களில் ஆழிப்பேரலை உருவாகி சப்பான் நாட்டை தாக்கும்.

ஆகவே சப்பானிய நாடு எப்பொழுதும் நில அதிர்ச்சிகளை சந்திக்கும் நாடு ஆகும். இயற்கையின் இடையூறுகள் இத்தனை இருந்தாலும், சப்பான் நாட்டின் கட்டிடங்களின் உயரங்கள் உலகை வியக்கவைக்கும் அளவு உயர்ந்து நிற்கின்றன.

மனித உயிர் பலியாவதை தடுப்பதே
சப்பானில், கட்டிடம் சிறியதாக இருந்தாலும் சரி, மிக உயரமானதாக இருந்தாலும் சரி, அவை பூமி அதிர்ச்சிகளை தாங்கி நிற்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன.

தோக்கியோ பல்கலை கழகத்தின் பேராசிரியர் சுன் சடோ, கூறுகையில், சப்பானிய கட்டிட பொரியாளர்கள், கட்டிடங்களை இரண்டு வகை இயற்கை இடர்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கின்றனர். முதலாவது, லேசான நில நடுக்கங்கள்.

அத்தகைய நில நடுக்கங்களை ஒவ்வொறு கட்டிடமும் தன் வாழ் நாளில் குறைந்தது 4 முறையாவது சந்திக்க நேரிடும். லேசான நில நடுக்கங்களால் கட்டிடங்கள் எந்த வகை பாதிப்பும் ஏற்படக்கூடாது.

இரண்டாவதாக, பெரும் நில நடுக்கத்தை தாங்கி நிற்க வேண்டும். பெரிய நில நடுக்கம் என்பது ரிக்டர் அளவு கோலில், 5-ற்கு மேல் பதிவாகும் அதிர்வாகும்.

பெரும் நில நடுக்கத்தின் போது கட்டிடம் பாதிப்படைந்தாலும், எந்த வகையிலும் மனிதர்களின் உயிர் பலையாகக் கூடாது. மனித உயிர் பலியாவதை தடுப்பதே சப்பான் கட்டிட கலையின் குறிக்கோள்.

அதிர்வை தாங்கும் கமுக்கம்
நில நடுக்கத்தை கட்டிடங்கள் தாங்கி நிற்கும் விதமாக பொரியாளர்கள் வடிவமைப்பதின் கமுக்கம், கட்டிடத்தின் அடியில் அவர்கள் நில அதிர்வுகளை தான்கும் விதமாக அதிர்வு உரிஞ்சிகளை அமைப்பதில் உள்ளது.

பேராசிரியர் சாடோ கூறுகையில் "ஒரு அமைப்பானது அதிர்வுகளை உரிஞ்சிக்கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை தாங்கி, உடையாமல் நின்றுவிடும்" கட்டிடங்களின் தூண்களின் தளங்களில், ரப்பர் போன்ற பொருட்களை கொண்டு, அதிர்வுகளை தாங்கும் தன்மையை உருவாக்குகின்றனர்.

இதனால், நில அசைவின் மூலம் ஏற்படும் தாக்கங்களை ஒரு அதிர்வு தாங்கி போன்று செயல்பட்டு கட்டிடங்களை காத்துக்கொள்கின்றன.

அதிர்வு தாங்கிகள்
கட்டிடம் உயரே செல்லச் செல்ல, பூமி அதிர்வுகளை தாங்கும் தன்மை குறைந்து வரும். சொல்லப்போனால், நில நடுக்கத்தை தாங்கி நிற்கும் வகையில் வடிவமிக்கபடாத கட்டிடம், லேசான நில நடுக்கத்தின் போது, சுமார் 5 அடி அளவிற்கு மேல் கோபுர் பகுதி ஆடும்.

சப்பானிய பொரியாளர்கள், இதற்கு தீர்வாக, ஒவ்வொரு தள அடிற்கிற்கும் ஒரு அதிர்வு தாங்கியை பொருத்துகின்றனர்.

இந்த அதிர்வு தாங்கிகள் பார்பதற்கு, ஏதோ மிதிவண்டிக்கான கையால் இயங்கும் காற்று அடைப்பான் போல இருக்கிறது. இத்தகைய சிறு சிறு அதிர்வு தாங்கிகளை பொருத்தினாலும், கட்டிட அமைப்பிற்கு தக்கவாரு ஒவ்வொரு கட்டிடத்திற்கும் பொரியாளர்கள் வடிவமைப்பதில் செலுத்தும் கவணமே கட்டிடங்களை நில நடுக்கத்தை தாங்கும் தன்மைகளை தருகிறது என்பது தான் அடிப்படை உண்மை.  

Share this Post:

தொடர்பான பதிவுகள்: