மனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு?

மனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு?

செயற்கை அறிவாற்றல், இன்றைய நிலையில் மனித மூளையின் ஆற்றலுக்கு எவ்வகையிலும் ஈடாக இல்லை என்பதே நிலை.

இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும், நம் மனித மூளையின் செயல்பாட்டிற்கு ஈடாக ஒரு விழுக்காடு அளவேனும் இந்த செயற்கை அறிவாற்றல் வளர்வதற்கு,

நாம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த செயற்கை அறிவாற்றல் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை.

சிற்சிறு வேலைகளில், இந்த செயற்கை அறிவாற்றலின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அவற்றை எழிதாக ஏமாற்றி தவறாக செயல்படுத்த இயல்கிறது.

அவற்றிற்கு இடப்பட்டிருக்கும் கட்டளைகளின் படி செயல்படும் திறன் கூடியிருந்தாலும், தானே கற்பது என்பது இன்னும் வாய்பாகவில்லை.

எடுத்துக்காட்டாக, அவற்றிற்கு, ஒரு வரிக்குதிரை அல்லது கொல்ப் பந்தின் வடிவமைப்பு குறித்து நாம் கற்றுக்கொடுத்துவிட்டு, பின்பு அந்த பொருட்களை அடையாளப்படுத்தச் சொன்னால் அவை சரியாக அடையாளப்படுத்தி விடுகின்றன.

அதே வேளையில், ஒரு கோல்ப் பந்தின் படத்தை ஒரு டீ குவழையின் மீதி அச்சிட்டு, அல்லது வடிவமைத்து, அந்த பொருள் என்னவாக இருக்கும் என சிந்திக்க அதை தூண்டினால், அது குழப்பமடைந்து தவராக அடையாளப்படுத்திக்கொள்கிறது.

மனித மூளையானது, பொருள்களின் வடிவமைப்பை கண்டறிந்து அவற்றை அடையாளப்படுத்துகின்றன. ஆனால், செயற்கை அறிவாற்றலால், அவ்வாறு வேருபடுத்தி பார்க்கப் அவற்றிற்கு இன்னும் கற்றுத்தரப்படவில்லை.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், மனித அறிவு, பொருளின் ஒட்டுமொத்த தன்மையை ஆய்கிறது, ஆனால் கருவிகள், அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையை பொருத்து, சிறு பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்கிறது. அதனால், பல முறை தவரான முடிவிற்கு வந்துவிடுகிறது.

இன்றைய சூழலில், படங்களையும், குரல்களையும், இந்த செயற்கை அறிவாற்றலால், அடையாளம் காண முடிகிறது, அதைத்தாண்டி இன்னும் பல தொலைவு செல்ல வேண்டும், மனித மூளைக்கு ஈடாக அவை ஒரு துளி அளவேனும் சிந்திக்க.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: