செய்திகள்
செப்டம்பர் 15 வாக்கில் மீண்டும் தமிழ்நாட்டில் கொரோனா தோற்று உச்சம் தொடும்... தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலுக்கு நடைபயணமாக வர தடை: மாவட்ட ஆட்சியர் அடுத்த கிழமை (வாரம்) முதல் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஆக.5-இல் முதல்வா் தொடக்கி வைக்கிறாா பள்ளிகள் 85% வரை கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக சுப. வீரபாண்டியன் நியமனம்! அடிப்படை கட்டாய தேவைகளுக்காக நடக்கும் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை


2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும்.

முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்போம். ஒவ்வொரு பாடல் தொகுப்புகளையும் நாம் காசு கொடுத்து வாங்க வேண்டும். ஒரு தொகுப்பில் 5 அல்லது 10 பாடல் இருக்கிறது என்றால், அவற்றில் நாம் விரும்பிக் கேட்பது வெரும் ஒன்றிரெண்டாக இருக்கும்.

இசை பாய்வு செயலிகள்

இவ்வாரு ஒவ்வொரு தொகுப்பையும் நாம் வாங்காமல், நம் திறன் பேசியில் உள்ள சேமிப்பு இடத்தையும் பயன்படுத்தாமல், இசை பாய்வு சயலிகள் மூலம் நாம் விரும்பும் நேரத்தில் நாம் விரும்பும் இசையை கேட்க இயலும்.

பாடலின் மொழிகளுக்கும் எந்த தடையும் இல்லை. தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், ஸ்பானிஷ் என எல்லா மொழிகளிலும் பாடல்களை கேட்கலாம்.

இத்தகைய இசை பாய்வு செயலிகள் மாத கட்டண முறையில், சில முற்றிலும் விலை இல்லாமலும் கிடைக்கிறது.

சில விளம்பரங்கள் உள் அடக்கியதாகவும், சில எந்த இடையூறு இன்றியும் கிடைக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை, அமேசான், கூகுள், டைடல், கானா, ஃகங்கமா என பல இசை பாய்வு செயலிகள் இருக்கின்றன.


அமேசான்

அமேசானின் நிகழ்நிலை தளத்தின் பிரைம் வாடிக்கையாளராக இருந்தால், அவர்களின் பிரைம் இசை செயலி விலையிலாமல் பாட்டு கேட்க உதவுகிறது. இவர்கள் சுமார் 20 லட்சம் பாடல்களை தமது வழங்கியில் வைத்துள்ளனர்.

அதே அமேசான், அமேசான் மூசிக் அன்லிமிடெட் என்கிற தொன்டில், சுமார் 500 லட்சம் பாடல்களை தனது வழங்கியில் வைத்துள்ளது.

இந்த தொன்டை ஒரு திங்களுக்கு ரூபாய் 500 (USD 7.99) என்ற கட்டணத்தில் வழங்குகிறது.


ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், சுமார் 500 லட்சம் பாடல்களை தனது வழங்கியில் வைத்துள்ளது. இந்த தொன்டை திங்கள் ஒன்றிற்கு கட்டணமாக மானவர் என்றால் ரூபாய் 60, மற்றவருக்கு ரூபாய் 120, 6 நபர்கள் கொண்ட குடும்பத்தினர் பயன்படுத்த ரூபாய் 190 என கட்டணம் பெறுகிறது.


கூகுள்

கூகுள் நிறுவனம், கூகுள் மூசிக் மூலம் சுமார் 400 லட்சம் பாடல்களை தருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், தங்களின் கணிணியில் உள்ள சுமார் 50,000 பாடல்கள் வரை உங்கள் கணக்கில் ஏற்றி, தங்களின் திறன் பேசிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாடல்களை கேட்டுக்கொள்ளலாம்.

இவர்கள் இரண்டு திட்டங்கள் வைத்துள்ளனர். ஒன்று, விளம்பரங்களுடன் கூடிய விலையில்லா தொன்டு. மற்றொன்று திங்களுக்கு ரூபாய் 99 செலுத்தி பயன்படுத்துவது.

விலையிலாமல் கிடைப்பதில், நீங்கள் பதிவேற்றிய பாடல்களை / இசையை மட்டும் கேட்கலாம். கட்டணம் செலுத்துவோர் வழங்கியில் இருக்கும் 400 லட்சம் பாடல்களை தேடி எதை வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்.


கானா மற்றும் ஃகங்கமா இசை பாய்வு செயலி

கானா மற்றும் ஃகங்கமா போன்றவை, விலையிலாமல் பாடல்களை இசை பாய்வு செய்கின்றன. அவர்களும் கட்டண தொன்டு வைத்துள்ளனர்.


சிறப்புகள்


அமேசான் மற்றும் கூகுள் செயலிகள் மூலம் நீங்கள் உங்களின் விருப்பப்பாடல்களை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து அகல்நிலையிலும் பாடல்களை கேட்கலாம்.

மேலும், அவற்றில் தங்களுக்கு விருப்பமான இசை தொகுப்பை உருவாக்கி பிறருடன் பகிறலாம்.

உங்கள் விருப்பப்பாடல்களை தொகுத்து கூகுள் மியூசிக் மூலம் நிகழ்நிலை வானோலி வழங்கலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: