60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்... மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்!!!

60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்... மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்!!!

60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர் தொலைவை மிதி வண்டியில் பயணிப்பது என்பது கேட்பதற்கு ஏதோ எளிதான செயலாக தோன்றலாம்.

உண்மையில், ஒருவர், நல்ல சாலை அமைப்பு கொண்ட இடத்தில், மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மிதி வண்டி கொண்டு 60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர் கடப்பது என்பது இதுவரை யாரும் செயல்படுத்திக் காட்டிடாத பெரும் சவாலே!

ஆண் ஒருவர் 54 கிலோமீட்டர் தொலைவை 60 நிமிடங்களில் கடந்துள்ளார். பெண் ஒருவர் 47 கிலோமீட்டர் தொலைவை கடந்துள்ளார்.

ஏன் "60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்" செய்ய முடிவதில்லை?

ஒருவர் தன் மிதி வண்டி மூலம் 60 நிமிடங்களில் 60 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்றால், அவர் தொடர்ந்து 0.6 குதிரை திறன் வலிமையை 60 நிமிடங்கள் செலுத்த வேண்டும்.

சராசரி மனிதனால், 30 விணாடிகள் இத்தகைய வலிமையை கொண்டு செயல்படுவதே முடியாத செயல்.

இதற்கு அடிப்படை, நமது தசைகளுக்கு உயிரிய காற்று சென்றடையும் வேகத்தில் இருக்கும் தொய்வே. நம் குருதியால் வேகமாக உயிரிய காற்றை கடத்த இயலுவதில்லை.

நல்ல பயிற்சிகள் மேற்கொண்டவர்களால் கூட, தொடர்ந்து தமது வலிமையை 60 நிமிடங்கள் வெளிக்கொண்டுவர இயலாமல் போகிறது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: