புற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்

புற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்

சி வி இராமன் அவர்களின் நிறமாலை இயல் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான நோய் அறிகுறிகளை, புற்று நோய் உள்பட, அனைத்தையும் கண்டறியலாம்.

ஆனால், அந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையால், அந்த நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

ஆனால், நெதெர்லாந்து, செர்மனி மற்றும் ஐக்கிய குடியரசு நாடுகளில் திறம்பட பயன்பட்டு வருகிறது.

இந்த நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், சில மணித்துளிகளில், நோயின் தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ள முடியும். உடலை நறுக்கி ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்காது.

சுமார் 150 ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்து, மருத்துவத்திற்கு இராமன் (Raman4Clinics) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்த நுட்பத்தின் மருத்துவ பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இராமனின் நிறமாலை இயல்

1930 - ல் நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சி வி இராமன் அவர்கள் இராமன் நிறமாலை இயல் என்ற தத்துவத்தை கண்டறிந்தார்.

இது உயர் தெளிவுத்திறன் ஒளியியல் நுட்பமாகும்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர்.

இந்த நுட்பத்தின் பயனால், ஒளி ஒரு பொருளை ஊடுறுவி செல்லும் போது வெளிப்படும் ஒளி மாறுதலைக்கொண்டு பொருளின் தன்மையை கண்டறியலாம்.

பயன்

இதனால், அறுவை செய்து ஆய்வுகள் மேற்கொள்ளாமல், ஒளியை பாய்ச்சுவதன் மூலமே பலவகையான நோயியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

புற்று நோய் தொடர்பான ஆய்வுகளை சில மணித்துளிகளில் செய்து முடித்து, புற்று நோய் என்ன என்பதையும் அதன் தாக்கம் குறித்தும் கண்டறியலாம்.

இந்த நுட்பத்தை பயன்படுத்துவதால், நேரம் மட்டுமல்ல, செலவுகளும் குறையும்.

மூளை அறுவை மருத்துவத்தின் போது, எந்த பகுதி மூளையில் பாதிப்பு உள்ளது என்பதை இந்த நுட்பத்தை கொண்டு உடனுக்குடன் ஆய்வை மேற்கொண்டு பாதிப்படைந்த மூளை திசுக்களை மட்டும் நீக்க முடியும்.

அறியாமை

மருத்து துறையில், இந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையினாலேயே இதன் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், மனித உயிர்கள் பல காக்கப்படும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: