இனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை

இனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை

அறிவியல், தொழில் நுட்பம் இவற்றிற்கு தொடர்பில்லாத இந்தி போன்ற மொழிகளை கற்க இனி தேவை இல்லை.

அறிவை வளர்க்க ஒரு மொழி பயன்படப் போகிறது என்றால் அதை கற்றுக்கொள்வது கட்டாயம்.

வடக்கில் இருந்து வரும் வட நாட்டு தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கோ அல்லது நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் உங்களின் மொழி அறியாதவரிடம் உரையாடுவதற்கோ நீங்கள் இனி எந்த ஒரு மொழியையும் கற்க வேண்டியது இருக்காது.

ஆம்... அமேசானின் அலெக்சா அல்லது கூகுளின் கூகுள் அசிச்டென்ட் அந்த மொழி பெயர்ப்பு வேலையை கவணித்துக்கொள்ளும்.

இதில் ஒரு குறைபாடு என்னவென்றால், ஒரு வினாடி பொழுது, மொழி பெயற்பதற்கு இந்த கருவிகள் எடுத்துக்கொள்வதே.

இன்றைய நிலையில், ஒரு விடுதி அறையை உங்களுக்காக முன் பதிவு செய்ய வேண்டுமானால், அதை இத்தகைய கருவிகளின் செயலிகளால் எளிதாக செய்ய முடிகிறது.

தற்போதைய ஆய்வில், ஒரு ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒருவர் செர்மன் மொழி மட்டும் தெரிந்தவரிடம் இந்த கருவி கொண்டு ஒரு முழு உரையாடலையும் மேற்கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த கருவி, ஒரு முறை மட்டும் தவறாக மொழி பெயர்தது.

ஆக தேவையற்ற மொழிகளை கற்பதை விட, வாழ்க்கைக்கு தேவையான அறிவு சார்ந்த கணிணி மொழிகள் கற்போம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: