ஓசூரில் தொடர் செய்தியாகும் ஆள் கடத்தி பணம் பறிப்பு

ஓசூரில் தொடர் செய்தியாகும் ஆள் கடத்தி பணம் பறிப்பு

ஓசூர் மட்டுமல்லாது, அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களிலும் பொதுவாகவே பண புழக்கத்திற்கு குறைவு இல்லை.

பெருமளவில் பணம் புழங்கும் சிலரை குறிவைத்து கடத்தல் கும்பலானது அவர்களை கத்தி, மிரட்டி பணம் பறிப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல செய்திகள் ஓசூர் மக்களிடையேயும் இங்கு தொழில் செய்ய முன் வருவோரையும் கலக்கமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் வெவ்வேறு நிகழ்வுகளில் நகைக்கடை உரிமையாளர்களை கடத்தி பணம் பறித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

பாகலுார், சூளகிரி, கெலமங்கலம் பகுதிகளில், மூன்று நகைக்கடை உரிமையாளர்களை கடத்தி, பணம் பறித்த, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரியைச் சேர்ந்தவர், நகைக்கடை உரிமையாளர் 39 வயதாகும் ஆனந்த்.

இவரை, 2018, செப்., 22 ல், பேலாளம் பேருந்து நிறுத்தம் அருகே, மகிழுந்துல் வந்த ஏழு பேர் கும்பல் கடத்தி, கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், .பின், 20 லட்சம் ரூபாய் வாங்கி, அவரை விடுவித்ததாகவும் கடந்த சில நாட்கள் வரை அமைதி அமைதி காத்த ஆனந்த், நேற்று முந்தைய நாள், சூளகிரி காவலர்களிடம் புகார் செய்தார்.

விசாரணை நடத்திய காவலர்கள், ஓசூர் அலசநத்தத்தை சேர்ந்த மல்லேஷ், 38, மற்றும் பால்ராஜ், 38, ஆகிய இருவரை கைது செய்து, மீதமுள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

இந்த கடத்தல் நிகழ்வைப் போல கெலமங்கலம் சாரதா பள்ளி அருகே வசிப்பவர் வட மாநிலத்தை சார்ந்த குமான் ராம், 41

இவரையும், ஏழு பேர் கும்பல் கடத்தி, 1 கோடி ரூபாய் கேட்டு, 40 லட்சம் ரூபாய் பெற்று, விடுவித்ததாக கூறப்படுகிறது.

குமான் ராம் புகாரின்படி, கெலமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தி, தேவகானப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், 24, ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்த மாதேஷ், 28, ஆகியோரை கைது செய்து, மற்ற ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

அடுத்ததாக சூளகிரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வட மாநிலத்தை சார்ந்த உமா ராம், 40

நேற்று முந்தைய நாள், இரண்டு சக்கர வண்டியில் சென்றவரை, "மாருதி சுவிப்ட், டாடா இண்டிகா" கார்களில் வந்த எட்டு பேர் கும்பல் கடத்த முயன்றதாம்.

தப்பி வந்த அவர், பாகலுார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக, சூளகிரி பகுதியைச் சேர்ந்த, மன்சூர் அலிகான், 24, உட்பட, எட்டு பேரை, காவலர்கள் கைது செய்தனர்.

மூன்று கும்பலிடம் இருந்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய, மூன்று கார் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: