ஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது

ஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது

ஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது

ஓசூர் அருகே உள்ள தளி அருகே உள்ள சீபின் குப்பத்தில் மின் இணைப்பு வழங்குவதற்காக உழவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கையூட்டை அடம்பிடித்து வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை கையூட்டு ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூர் அடுத்த தளி அருகே உள்ள சீபின்குப்பத்தை சேர்ந்தவர் சனந்த ரெட்டி.

இஅவர் தனது நிலத்தில் உழவு வேலை செய்து வருகிறார்.  தமது தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கக் கோரி தளி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவர் மின் இணைப்பு வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கையூட்டாக வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சனந்த ரெட்டி மிகவும் மன வேதனை அடைந்துள்ளார்.  அவர் இது குறித்து கிருட்டிணகிரி கையூட்டு ஒழிப்பு காவலர்களிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து வேதிப் பொருள் தடவிய ரூபாய் நோட்டுகளை கையூட்டு ஒழிப்பு காவல்துறையின சனந்த ரெட்டியிடம் கொடுத்து, அதை கையூட்டாக வென்கடேசனிடம் கொடுக்கச் அறிவுருத்தினர்.

அவரும் அவ்வாரே கொடுத்தபோது அதனை வாங்கிய பொறியாளர் வெங்கடேசனை அருகில் மறைந்திருந்த கையூட்டு ஒழிப்பு காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

தலை குணிந்த படி வெங்கடேசன் அலுவலகம் விட்டு காவலர்கள் புடை சூழ வந்ததை பிறர் பார்த்து நின்றனர்.