பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நடுவன் அரசு கூட்டியுள்ளது. இதனால், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 30 பைசாவும் உயரும்.

நடுவன் அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய்யும் போது பெட்ரோல் டீசல் விலையை கூடுதலாக்கி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலையானது, அதன் உயர் மதிப்பிலிருந்து குறைந்துள்ளது. இதனால், அரசின் வரி வருவாயை கூடுதலாக்கும் நோக்கிலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் மீதான சாலைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான கூடுதல் வரியையும் (செஸ்) லிட்டருக்கு ரூ.2 உயர்த்த நடுவன் அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.28,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இது தவிர, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி டன்னுக்கு ரூ.1 உயர்த்தப்படுகிறது.

இந்த இறக்குமதி வரி மூலம் ரூ.22 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.

கலால் வரி உயர்த்தப்பட்டதினால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.30 ம் உயரவுள்ளது.

பெட்ரோல் மீது தற்போது ரூ.17.98 மொத்த கலால் வரி (அடிப்படை கலால் வரி-ரூ.2.98; கூடுதல் கலால் வரி - ரூ.7; செஸ் வரி-ரூ.8) விதிக்கப்படுகிறது.

டீசல் மீதான மொத்த கலால் வரி ரூ.13.83 (அடிப்படை கலால் வரி-ரூ.4.83; கூடுதல் கலால் வரி-ரூ.1; செஸ் வரி-ரூ.8) ஆக உள்ளது.

வாட் வரி: இவை தவிர, ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விழுக்காடுளில் மதிப்பு கூட்டு (வாட்) வரியை பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன.