தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தலைவர்களாக ஒரு ஊர்ல முட்டாள்கள் இருந்தால் பரவாயில்லை, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விடலாம்... நாடு முழுவதும் இருந்தால் நாடு தாங்குமா?

தமிழ் நாட்டுல அணைகளில் உள்ள தண்ணிரை மீன்கள் குடிப்பதால் தான் அணை நீர் வற்றிப்போவதாக இங்கே தமிழகத்தில் ஒரு அமைச்சர் அறிவியல் அறிவிக்கை வெளியிட்டு அசத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசு தலைவர் கோவிந்து தலைமையில் ஒரு குழு பொம்மை உலக உருண்டையை நடுவில் வைத்து அதன் மீது மாட்டு சிறு நீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தது.

என்னவென்று வினவியதற்கு, அந்த புவி உருண்டை பொம்மை மீது மாட்டு சிறு நீர் ஊற்றுவதால் புவி வெப்பமயமாவது குறைக்கப்படுவதாக அந்த குழு விளக்கம் சொல்லி பல பேரை ஆழ்நிலை உறக்கம் (கோமா) நிலைக்கு தள்ளியது.

இந்நிலையில், தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் அங்குள்ள அணை ஒன்றில் இருந்து நீர் வெளியேறி வருகிறது.  அதற்கு அந்த மாநில அமைச்சர் ஒருவர், நண்டுகள் தான் அந்த மாதிரி செய்கின்றன என விளக்கம் கொடுத்து உலக அறிவியலாளர்களை... குறிப்பாக பொறியாளர்களை மயக்கம் அடையச் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த பெரும் மழையால் திவாரே அணை உடைந்தது குறித்து அம்மாநில அமைச்சர் தனசீ சவந்த் அளித்த விளக்கம் பொதுமக்கள் நடுநடுங்க வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கிழமை துவக்கம் முதல் 4 நாட்கள் பெரும் மழை பெய்தது.

கொங்கன் பகுதியில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை 20 லட்சம் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டது. இடைவிடாத மழை காரணமாக மொத்த கொள்ளளவும் நிரம்பிய நிலையில், அபாய அளவை தாண்டிய அணை, செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.

அதனால் அணையையொட்டி அமைந்துள்ள 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதன் காரணமாக 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மாநில நீர் வள மேலாண்மைத் துறை அமைச்சர் தனஜி சவந்த், அணை உடைந்த நிகழ்வு இயற்கைப் பேரழிவு. எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும், விதியை வெல்ல யாரால் முடியும் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் அறிவியல் விளக்கம் கூற முற்பட்டு "அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளும், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களும், அணையின் தடுப்புகளை, அப்பகுதியில் இருந்த நண்டுகள்தான் பலவீனப்படுத்தி விட்டதாக என்னிடம் கூறினர்.

மதில்சுவர்களை அதிக அளவில் நண்டுகள் பலவீனப்படுத்தியதே இதற்குக் காரணம், அது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.Share this Post:

தொடர்பான பதிவுகள்: