ஓசூர் நகர் பகுதிக்கு சூலை 11 அன்று மின் தடை

ஓசூர் நகர் பகுதிக்கு சூலை 11 அன்று மின் தடை

மின்சார வாரிய துணை மின்நிலையங்களில் மற்றும் அவை சார்ந்த இடங்களிலும் திங்கள் தோறும் ஒரு நாள் முழுவது மின் பகிர்வதை நிறுத்தி ஒக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2 ஆம் நாள் பாகலூர் மற்றும் சூளகிரி பகுதியில் பணிகள் மேற்கொள்வதற்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இன்று, சூலை 6 ஆம் நாள், சிப்காட் பகுதிகளில் மின் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஓசூர் நகர் பகுதியில் உள்ள

1.  டைடான் 33/11 KVA
2.  ஓசூர் 33/11 KVA
3.  ஓசூர் 110 KVA

ஆகிய துணை மின்நிலையங்களில் வரும் 11 ஆம் நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்தி ஒக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் வரும் 8 ஆம் நாள்,

1. தளி

2. கெம்பட்டி

3. தேண்கனிக்கோட்டை

4. அஞ்செட்டி

5. மீனாட்சிபுரம்

6. கெலமங்கலம் தாழ்நிலை

7. கெலமங்கலம் -ஆளில்லா 

8. உத்தனப்பள்ளி

துணை மின்நிலையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அந்த மின் நிலையங்களை சார்ந்துள்ள பகுதிகளில் நாள் முழுதும் மின் பகிர்மானம் இருக்காது.