கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள் 7 பேர் கைது!

கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள் 7 பேர் கைது!

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மல்லன்குழி ஊரில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிகழ்வில் திடீர் திருப்பமாக அவர்களது உறவினர்கள் 7 பேரைப் பிடித்து தாளவாடி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி ஊரை சேர்ந்தவர் நாகண்ணா என்பவரது மனைவி ராசம்மாள் (40.) இவரது மகள் கீதா (18).

நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ராசம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.  

இந்நிலையில்,  ராஜம்மா, கீதா இருவரும் அறிவன் கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது குடிசையில் திடீரென தீப்பிடித்ததில் இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தாளவாடி காவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து பார்த்த போது, இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். உடல் கரிகட்டை போல் இருந்ததால் உடலை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலா நிலை இருந்தது.

எனவே, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேலை நிகழ்விடத்திற்கே வரவழைத்து இருவரது உடல்களும் அங்கேயே உடல் ஆய்வு செய்யப்பட்டன.  

இதுகுறித்து தாளவாடி காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பணம் மற்றும் சொத்துப் இடர்பாடுகளால் ராசம்மாளின் கணவர் நாகண்ணாவின் உறவினர்களுக்கும், ராசம்மாளின் தாய் வீட்டினருக்கும் இருந்த சண்டிஅயால் குடிசைக்குத் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக தாளவாடி காவலர்கள் மல்லன்குழி ஊரை சேர்ந்த 7 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

குடிசைக்குத் தீ வைத்து தாய் மற்றும் மகளைக் கொன்றுவிட்டு, விபத்து போல நாடகமாடிய உறவினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.