கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி.

கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

தனது கூகுள் பிளேவில் உள்ள அனைத்து செயலிகளையும், தீங்குநிரல் இருக்கிறதா என்பதை ஆய்ந்து பின்பே தனது தளம் மூலம் பயணர்களுக்கு வழங்குகிறது.

கூகுளின் ஆய்வுகளின் முறையை கண்டறிந்து, அத்தகைய ஆய்வுகளில் இருந்து தப்பி, தீங்குநிரல் வடிவமைப்போர், தீங்குநிரல் அடங்கிய செயலிகளை கூகுள் பிளேவில் பதிவேற்றிவிடுகின்றனர்.

ஒன்றும் அரியாத பயணர் அத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது அவை, வங்கி தகவல்கள் உள்ளிட்ட தனிப்பயன் தகவல்களை உடுருவலாளர்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறது.

கண்டறியப்பட்டது இரண்டு

இத்தகைய தீங்குநிரல் உள்ளடக்கிய செயலிகள் இரண்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒன்று, தன்னை பண மதிப்பு மாற்ற தகவல் செயலி (Currency Converter) என்று அடையாளப்படுத்தி உள் நுழைகிறது. மற்றொன்று மின்கலம் சேமிப்பதில் (BatterySaverMobi) உதவிபுரிய வருவதாக சொல்லி உள் நுழைகிறது.

இவை திறன் பேசியில் பதிவிறக்கி, நிருவப்பட்டு, செயல்படுத்தப்பட்ட பின், கமுக்கமாக அனுபிஸ் என்கிற கமுக்கமாக மறைந்திருந்து தகவல் திருடும் நிரல் ஒன்றை தானே பதிவிறக்கிக் கொள்கிறது.

பயணர், செயலி புதிப்பிப்பு செய்வதாக நினைத்துக்கொள்வார்.

இத்தகைய தகவல் திருட வரும் செயலிகள் பொதுவாக, பல 5 தாரகை மதிப்பு கருத்துக்களை பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே கூகுள் பிளேவில் பெற்றிருக்கும். மேலும், அவை விலையில்லாமல் வழங்கப்படும்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த தீங்குநிரல் உள்ளடிக்கிய ஆண்ட்ராய்டு செயலி -கள், தான் மனிதரின் கையில் உள்ள திறன் பேசியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறோமா அல்லது கூகுளின் ஆய்விற்கு ஊட்பட்டிருக்கிறோமா என்பதை திறன் பேசியின் உணர்விகளின் தகவல்களைக் கொண்டு முடிவெடுத்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட்டு, கூகுளின் ஆய்வை தவராக்கி தன்னை நல்லவன் என்று காட்டி கூகுள் பிளே-வில் இடம் பிடித்துவிடுகிறது.

வெறும் உணர்விகளை மட்டுமல்ல

இந்த தீங்குநிரல் உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு செயலி -கள் வெறும் அசைவு உணர்விகளை மட்டும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதில்லை.

அவை, ஏற்கனவே திறன் பேசியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் டெலிகிராம் அல்லது ட்விட்டெர் போன்ற செயலிகளில் குறிமுறையேற்றம் செய்து, தனது ஆணை மற்றும் கட்டுப்பாடு வழங்கிக்கு தகவல் அனுப்பி, அனுபிஸ் என்கிற கமுக்கமாக மறைந்திருந்து தகவல் திருடும் நிரல் ஒன்றை பதிவிறக்கிக் கொள்கிறது.


நாம் தெளிவடைவோம்

விலையிலாமல் ஒரு தொண்டு நமக்கு வழங்கப்படுகிறது என்றால் அதில் வேறு ஏதோ ஒன்று மறைந்துள்ளது என்பதை உணர்வோம்.

அது அரசின் விலையில்லா பொருட்களாக இருக்கலாம் அல்லது கணிணி அல்லது திறன் பேசிகளில் பயன்படும் நிரல்களாக இருக்கலாம்.

திருடர்கள் எந்த வகையிலும் நம்மை ஏமாற்றி நம்மை முட்டாளாக்கி தனது திருடும் திறனில் தம்மை செழுமை ஆக்கிக்கொண்டிருப்பார்கள்.

நாம் தான் விலையில்லா பொருட்களைத் தேடிச்சென்று நம்மை நாமே ஏமாற்றி முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: