திறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்

திறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்

அறிவியலாளர்கள், நெகிழும் தன்மை கொண்ட, தனது சூழ்நிலைக்கு தக்க தன் அமைப்பை மாற்றிக்கொள்ளும் பொடி நெகிழும் எந்திரன்களை வடிவமைத்துள்ளனர்.

இவை உயிரி இசைவுறு தன்மையை முழுமையாக கொண்டிருப்பதால், ஒரு நுண்ணுயிரி போல, அசைவுகளால், மனித உடலுக்குள் எழிதில் நுழையமுடியாத இடங்களுக்கும் சென்றுவிடுகிறது.

இத்தகைய பொடி எந்திரன்கள் மருந்தை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செலுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்படும் மருத்துவ தேவைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது.

நுண்ணுயிர்களை எடுத்துக்காட்டாக

சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்கில் அறிவியலாளர்கள் செல்மான் சாகர் மற்றும் பிராட்லே நெல்சன் ஆகியோர் தலைமையிலான குழு, நுண்ணுயிர்களை எடுத்துகாட்டாக வைத்து உயிரி இசைவுறு நுண் எந்திரன்களை வடிவமைத்துள்ளனர்.

இந்த எந்திரன்கள் நெகிழும் தன்மைய்டன் இளக்கமாகவும் இருக்கிறது.

இவை தனது தன்மையால் பாய்மத்தில் நீந்திச்செல்லும் திறமையும், தன் அமைப்பை தேவைக்கு தக்கவாரு மாற்றி அமைத்துக்கொள்வதால், சுறுங்கிய குருதி நாளங்கள் உடே கடந்து திசையமைவு மாறுவீதம் எவ்வகையிலும் குறையாமல் செயல்படுகிறது.

இவற்றின் நீர்மக்கட்டிக்கூழ் நாணோ கூட்டில் நாணோ காந்த பொடிகள் இருப்பதால் அவற்றை மின்காந்த புலம் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

உட்பொதிந்த அறிவுத்திறன்

எந்திரன் என்றாலே நமக்கு, ஒரு மிகப்பெரிய இயந்திரத்தின் அமைப்பே புலப்படும். அவற்றில் பொருத்தப்பட்டுள்ள உணர்விகள் மின் கலன்கள் என எல்லாம் நம்மை திகைக்க வைக்கும்.

ஆனால் இந்த நுண் எந்திரன்கள் நாம் நினைத்துப் பார்க்கும் எந்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

இந்த சிறிதான எந்திரன்கள் ஒரிகமி (காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஓர் சப்பானியக் கலை) முறையை பின்பற்றுவதால், அவற்றால் தனது அமைப்பை எளிதாக மாற்றிக்கொள்ள இயல்கிறது.

அவற்றின் பெயர்ச்சியியக்கம் உட்பொதிந்த அறிவுத்திறன் கொண்டு செயல்படுகிறது.

அறிவியலாளர் சகர் கூறுகையில் "எமது எந்திரன்கள் சிறப்பு கலவையும், அமைப்பும் கொண்டிருப்பதால், அவை பாய்மத்தின் தன்மையில் தனது தன்மையை மாற்றிகொண்டு எளிதில் நகர முடிகிறது. பாய்மத்தின் பிசுபிசுப்போ அல்லது ஓஸ்மிக் உப்பின் செறிவில் மாற்றம் ஏற்பட்டாலோ அது தனது வடிவத்தை மாற்றி தனது வேகத்தையும் திசையமைவு மாறுவீதத்தில் எந்த தொய்வும் இல்லாமல் கடந்து செல்கிறது."

அவை எங்கு சென்றடைய வேண்டும் என்பதை முன்பே நிரலமைத்துக்கொண்டால், அவற்றின் செயல்பாட்டை அதிகப்படுத்தி தேவையற்ற உணர்விகளையும் ஊக்குவிப்பிகளின் பயன்பாட்டையும் தவிர்கலாம்.

இந்த எந்திரன்களை மின்காந்தம் கோண்டு கட்டுப்படுத்தி இயக்கலாம், அல்லது அவற்றை தாமே கிடைக்கும் இடைவெளிகளில் பாய்வத்தின் பாய்வுக்கு ஏற்ப பயணம் செய்ய வைக்கலாம்.

எந்த வகையிலும் அவை சிறப்பாக செயல்பட்டு, தான் சேர வேண்டிய இடத்தை துல்லியமாக சென்றடையும்.

இயற்கையே துணை

இயற்கை பல்வேறு நுண்ணுயிரிகளை படைத்துள்ளது. அவை, தனது தேவைக்கேற்ப தனது அமைப்பை மாற்றிகொள்கின்றன.

நமக்கு அறைக்கூவலாக இருப்பது அவற்றின் இயற்பியல் தன்மைகளை புரிந்துகொள்வது. புரிந்து கொண்டா நம்மால் அவற்றை கட்டுருவாக்க நுட்பங்களில் பயன்படுத்திக்கொள்ள இயலும்.

இவை எந்திரங்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இவற்றை மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும்.

வரும் ஆண்டுகளில், இந்த நுண் எந்திரங்களின் நீந்தும் தன்மை மென் மேலும் முதிர்வடையும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: