நோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்... இளமை தரும்!

நோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்... இளமை தரும்!

உணவு உண்ணாமை - நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடவுள் பெயரால் ஆண்டிற்கு ஒரு முறையாவது கடைபிடிக்கும் பழக்கம் நோன்பிருத்தல்.. ஒரு வேளை உண்ணாமை ...பட்டினி இருத்தல்.

இத்தகைய நோன்பின் போது அவர்கள் கறி உணவுகளையும் நறுமணப்பொருள் உண்ணுவதையும் முற்றிலும் தவிர்த்தனர்.

ஏன் இத்தகைய நோன்பு?

அறிவியலாளர்கள் ஆய்வுகளின் மூலம், மனிதர்களுக்கு ஒரு வேளை நோன்பு எத்தகைய பயன் தருகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

உணவு உண்ணாமை, நமது நாள்சார் சீரியக்கத்தில் மாறுதல் நிகழ்வதால், அதன் தாக்கம், ஈரல் மற்றும் எலும்பு தசைகளின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால், உடல் நலம் பெருகி, வயதாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

வள்ளுவர் இதையே

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்நுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - 255

என்று உரைத்துள்ளார் போலும்.

நாள்சார் சீரியக்கம்

நாள்சார் சீரியக்கமானது நமது உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மணிக்காட்டியாகும். சூழ் நிலையகளுக்கு தக்க சீர் சமநிலையை காக்க உதவுகிறது.

உணவு உண்பது, தசைகளின் நாள்சார் சீரியக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

ஆனால், உணவு உண்ணாமை எந்த வகையில் நாள்சார் சீரியக்கத்தை பாதிக்கும் மற்றும் அதனால் நம் உடலுக்கு ஏற்படும் மாறுதல் என்ன என்பது குறித்த ஆய்வு இல்லாமல் இருந்தது.

புதிய ஆய்வின் மூலம் நாள்சார் சீரியக்கத்தை எவ்வாறு உணவு உண்ணாமை பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணா நிலையில் அணுக்களில் இருந்து பெறப்படும் பதிலானது, எவ்வாறு மரபனு அழுத்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.

மற்ற உள் உறுப்புகளை விடவும், எலும்பு தசைகள், உணவு உண்ணாமையின் போது இரு மடங்கு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

உணவு உண்ணாமை

உணவு உண்ணா நிலையில், உடல் அணுக்கள் உணவை எதிர்பார்த்து காத்திருப்பதால், அவை புதிய நாள்சார் சீரியக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், புதிய மரபனு நாள்சார் சீரியக்க சுழற்சி வெளிப்படுகிறது.

தெளிவாக சொல்லவேண்டுமாயின், நோன்பிருத்தல், அணுக்களை மறு நிரல் செய்ய வைக்கிறது.

நாள் முழுவது பட்டினி கிடக்காமல், ஒரு வேளை உணவை முறை வைத்து தவிர்த்து வந்தால், அதனால் நமது உடல் அணுக்களின் செயல்பாடு சிறப்பாக அமையும்.

அதனால், வயதாவதினால் ஏற்படும் நோய்களை தவிர்த்து நலமாக வாழலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: