மின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா?

மின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா?

மின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா?

அணு உலைகளால் இந்த கோள் மாசு படும்... அணு உலைகளால் இந்த கோள் மாசுகளில் இருந்து விடுபடும்.. இந்த இரண்டு கூற்றுமே உண்மை!!!

அணு உலைகளால் ஏற்படும் நண்மைகள்!

முதல் நண்மை, அவை கரியமில வளிமம் வெளியிடுவது கிடையாது. அதனால் இந்த மண் கோள் வெப்பமாவது தவிர்க்கப்படும்.

கரியமில வளிமம் நிலக்கரி எரிப்பதால் கூடுதல் அளவு வெளிப்படுகிறது.

அரசுகள் 2050-ல் முழுமையாக கரியமில வளிமம் வெளிப்படுவதை தவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அவை ஏன் சுற்றுச் சூழலுக்கு தீங்கு?

201ல் - ஆம் ஆண்டில் சப்பான் ஃபுக்குசிமா அணு உலை வெடிப்பையும் அதனால் ஏற்பட்ட அனூ கதி வீச்சு பாதிப்புகளை நாம் உணர வேண்டும்.

1986-ல் உக்ரைன் நாட்டின் செர்னோபிள் அணு உலை வெடிப்பையும் அதனால் ஐரோப்பிய கண்டம் அனு கதிர் தூசிகளால் மாசு பட்டதையும் மறக்க இயலாது.

அணு உலைகளில் இருந்து வரும் கழிவுகளை அரசுகள் எங்கே கொண்டு போய் வைக்கும். அந்த கழிவுகள் மனித இனத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியவை.

அணு உலைகள் இல்லாமல் மின் தட்டுப்பாடுகளை சமாளிக்க இயலுமா?

கரியமில வளிமத்தால் ஏற்படும் மாசு பாதிப்புகளை கணக்கில் கொண்டால், அணு உலைகளில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்பு ஒன்றுமில்லை என சொல்லலாம்.

காற்றும் அடிக்கவில்லை... ஞாயிறும் ஒளி கொடுக்கவில்லை என்றால், இயற்கையில் இருந்து பெறப்படும் மின்சாரம், தடைபடும்.

இயற்கை வழி மின் உற்பத்தி இல்லை, சூழல் மாசு படுவதும் தவிர்கப்பட வேண்டும் என்ற சூழலில், நமக்கு இருக்கும் ஒரே நுட்பம், அணு உலைகளை கொண்டு மின் உற்பத்தி.

2030 ஆம் ஆண்டு வாக்கில் மண்ணில் இருந்து பெறப்படும் எரிபொருள்கள் நிறுத்தப்படும் பொழுது, நமக்கு மாற்று அணு உலைகளே.

அறிவியலாளர்கள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், வீடுகளின் கொல்லை புறத்தில் நிறுவத்தக்க சிறிய அணு உலைகள் கொண்ட மின் ஆக்கிகள் வடிவமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: