கட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி

கட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி

Cat S48c, கேடர்பில்லர் நிறுவனத்தின், கட்டிட பொறியாளர்களுக்கான திறன் பேசி.

திறன் பேசிகள் செயல்பாடுகளில் சிறப்பு என்றாலும், அவை எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை.

ஒரு பொறியாளரின் வேலை இடம், உயரமான இடங்களிலும், பாறைகள், கற்கள் என கரடு முரடனாக இடமாக இருக்குமேயானால், திறன் பேசி தவறி விழுந்தால் அதன் நிலை என்ன என்று சிந்தித்துப்பார்க்க தேவை இல்லை.

அவை உடைந்து சுக்கு நூராகிப் போகும். ஆகவே கட்டிடம் கட்டும் இடங்களுக்காக, அத்தகைய சூழலில் வேலை செய்பவர்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டு, சந்தைக்கு வந்திருப்பது தான் இந்த திறன்பேசி.

இவை கரடு முரடான வேலை செய்பவர்களுக்கான திறன் பேசி. இதில், கட்டிட பொறியாளர்களுக்கான செயலிகளும் இடம் பெற்றுள்ளன.

திறன் பேசியின் வெளிப்புரம் ரப்பர் தன்மையாகவும், அதன் மேல் உள்ள குறுக்கு கோடுகள் அவற்றை அழுத்தி பிடிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

எல்லா துளைகளுக்கும், பாதுகாப்பு மூடிகள் இருக்கிறது.

கொரிலா கண்ணாடி இருப்பதால், அவ்வளவு எளிதில் சிராய்ப்புகள் ஏற்படாது.

இந்த திறன் பேசிகள் IP68 தரத்துடன் வருகின்றன. அதனால், தூசுகளிடமிருந்து பாதுகாப்பும், தண்ணீரில் விழுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.


அதாவது 4 அடி ஆள தண்ணீரில் விழுந்துவிட்டால் 35 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும்.

MIL-SPEC 810G தரச் சான்றிதழ் இருப்பதால், அது 6 அடி உயரத்தில் இருந்து காண்கிரீட் தளத்தில் பொத் என்று விழுந்தாலும் உடையாமல் அப்படியே இருக்கும்.

Non-Incendive Class1 Div2 என்கிற சான்றிதழ், இது -13 டிகிரி சென்டிகிரேடில் இருந்து +55 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கி நிற்கும் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

4000 எம் ஏ எச் மின்கலன், 13 மெகா பிக்சல் ஒளிப்படக்கருவி, 32 GB உள்ளடக்க சேமிப்பகம், 6.5 அங்குல திரை, என எல்லா தேவையான சிறப்புகளும், விலை ரூபாய் 35,000 என்ற அளவிலும் இருப்பதால், ஒவ்வொரு கட்டிட பொறியாளரும், கட்டிட வேலை தொடர்பான பணிகளில் இருப்போரும் விரும்பி இந்த திறன் பேசியை வாங்குவர் என்பது உறுதி.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: