போலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே!

போலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே!

போலி கறி, தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை, எல்லோரும் சாப்பிடலாமே!!!

போலி கறி... ஆட்டு கறி, மாட்டு கறி, கோழி கறி, பன்றி கறி இப்படி கறி போல நாவில் ருசிக்கும், ஆனால், உன்மையில் அவை தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை.

இப்படி தாவரங்களில் இருந்து கறி பெறப்பட்டால், சைவ உணவு அசைவ உணவு என்று வேறுபாடுகள் எதுவும் இருக்காது. அனைவரும் அனைத்தையும் தயங்காமல் உண்ணலாம்.

அதற்காக மட்டும் இந்த போலி கறி தொடர்பான கருத்து உலகம் முழுவதிலும் பேசப்பட்டு வருவது இல்லை.

மாசு

உண்மையில் கறி விலங்குகளால், இந்த மண் மெருமளவு மாசு படுகிறது என்பதாலேயே!

ஆம், கறிக்காக நாம் வளர்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளால், பைங்குடில் வளிமங்களான கரியமில வளிமம் மற்றும் மீத்தேன் பெருமளவு வெளிப்படுகிறது. இதனால் பூமி வெப்பமாகிறது.

மேலும், இந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகளும் தேவையற்ற மரபனு மாற்றங்களும் ஏற்படுகின்றன.

இந்த கறி விலங்குகள் மனிதர்களுக்கு அவை தரும் புரதச்சத்தை காட்டிலும், இந்த மண்ணில் உள்ள புல் பூண்டு என்று அனைத்தையும் உண்டு மனிதர்களுக்கான உழவு நிலத்தில் 70 விழுக்காடு நிலத்தை தங்களது உணவு தேவைக்கு எடுத்துக்கொள்கின்றன.

உணவு பழக்கம்

மனிதர்களின் உணவு பழக்கம் என்பது அவர்களின் பண்பாட்டுடன் தொடர்புடையது. ஆகவே, இதை மட்டும் சாப்பிடலாம், மற்றவற்றை உண்ணக்கூடாது என எந்த சமூகத்தையும் அரசு கட்டளைகள் மூலம் மாற்ற இயலாது.

மாற்றாக

உயிரிப்பொறியியல் மூலம், தாவரங்களின் மரபனுக்களில் சில மாறுதல் செய்தாலே நாம் எதிர்னோக்கும் போலி கறி உற்பத்தி செய்ய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், தாவிர புரதத்தில், சிறிதளவு தன்மை மாற்று கலவையை ஊற்றினால், அது நாம் விரும்பும் கறியாக மாறும்.

மேல் நாடுகளில் மாட்டிறைச்சி உணவிற்கு மாற்றாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

90 விழுக்காடு அளவிற்கு மாட்டிறைச்சி பயன்பாட்டை விரைவில் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

"விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்" என்ற தலைப்புல் நம் தளத்தில் நாம் வெளியிட்ட கட்டுரையில் எடுத்துரைத்துள்ளது போல, உயிரி நகலாக்க முறையிலும் கறி உணவை உற்பத்தி செய்ய பலர் முயன்று வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: