சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை!

சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை!

மருத்துவமணையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறீர்களா? சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை!

மனித உடல் வலிமையற்றது.

மக்கள் மருத்துவமணையின் முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில், ஏதோ ஒன்றிற்காக அனுமதிக்கப்பட வேண்டி சூழல் ஏற்பட்டால், அவர்களில், 50 விழுக்காட்டினர், உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இத்தகைய பாதிப்பு குறித்து 2006 -ஆம் ஆண்டுகளிலேயே பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொதுவாக, முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில் வழங்கப்படும் மருந்துகள் சிலர் உடலுக்கு ஒவ்வாமல், நச்சுத்தன்மையை வெளிப்படுத்தி, அவர்களின் சிறுநிறகத்தில் ஊறு ஏற்படுத்தி விடுகின்றனர்.

சிலருக்கு, குருதி ஏற்றப்படுவதால், அந்த குருதியினால் சிறுநீரகத்தில் கடும் ஒவ்வாமை அளர்ச்சி ஏற்பட்டு சிறுநீரகம் பாதிப்படைகிறது.

மருத்துவர்கள் நம் உடலில் உள்ள கட்டிகளை நீக்கும் போது அல்லது அவற்றை அழிக்க முயலும் போது, அத்தகைய கட்டிகளின் திசுக்கள் சிதையுற்று, அவற்றில் இருந்து வரும் நச்சுக்களும் நம் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

செயற்கை அறிவாற்றல் மூலமாக, யார் யாருக்கெல்லாம் முனைப்புக் கவனிப்புப் பிரிவில் சேர்க்கப்படும் போது, சிறுநீரகத்தில் ஊறு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறியமுடியும்.

சுமார் 700,000 மருத்துவ ஆவணங்களை கொண்டு ஒரு மென்பொருள் உருவாக்கி, அதன் மூலம், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது என்பதை முன் கூட்டியே கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுநீரகம் Kidney சிறுநீரகம் Kidney

இத்தகைய செயற்கை அறிவாற்றலை பயன்படுத்தி, பாதிப்பு ஏற்படாதவாறு, நோயாளிகளை கையாளலாம்.

பணக்கார மற்றும் வளர்ந்துவிட்ட நாடுகளில், இந்த செயற்கை அறிவாற்றல் செலவுகளை கட்டுப்படுத்தும். அதே வேளையில், இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில், மருத்துவர் பற்றாக்குறை இருப்பதால், தேவையில்லாமல் மருத்துவர் நேரத்தை செலவிட வைப்பதை தவிர்கலாம்.

கூகுள், இத்தகைய நுட்பங்களில் அதிகளவு செலவிட்டு வருகிறது. அவர்கள், கண் நோய் மற்றும் புற்று நொய்களுக்கும், செயற்கை அறிவாற்றல் மூலமாக பல தீர்வுகள் பெற ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து தகவல்கள் ஒன்றினைக்கப்பட்டு, அதன் மூலம் திறமை மிக்க மென்பொருள் உருவாக்கினால், பல உயிர்களின் சிறுநீரக பாதிப்பு தவர்கப்படும்.

திடீர் சிறுநீரக செயல் இழப்பு, மருத்துவமணையின் மருத்துவ அழுத்தத்தினாலா அல்லது நோய் தொற்றினாலா அல்லது, அறுவை மருத்துவத்தின் தாக்கத்தாலா என்பதை முன்னறே கண்டறிய முடியும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: