ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி?

ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி?

பெண்கள் விடுதியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி என்ற செய்தி நம் எல்லோரையும் அச்சமடைய வைத்தது.

அந்த செய்தி மட்டுமல்ல, ஒரு பெண் அமைச்சர், துணி மாற்ற ஒரு துணிக்கடையின் துணி மாற்று அறையில் நுழைந்த போது, ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி இருப்பதை கண்டு அலறினார்.

உலகம் முழுவது, இத்தகைய ஒளித்து வைக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நம்மை எவ்வாறு ஒளித்துவைக்கப்பட்ட ஒளிப்படக்கருவிகளில் இருந்து காத்துக்கொள்வது?

வாடகை வீடோ அல்லது அறையோ அல்லது தங்கும் விடுதியோ, கட்டிட உரிமையாளர் கட்டிடத்தின் வெளியே கண்காணிப்பு ஒளிப்படக்கருவி பொருத்தி வைப்பதை வாடகைக்கு வருவோர் எதிர்க்க இயலாது. ஏனெனில், பாதுகாப்பு கருதி, அத்தகைய ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஆனால், அறைகளினுள்ளோ அல்லது கட்டிடத்தின் வாடகைக்கு விட்ட பகுதியில் எத்தகைய கண்காணிப்பு கருவிகளையும் பொருத்த சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு பொருத்தினால், சட்டத்திற்கு எதிரானதாகும்.

சந்தேகம் வருகிறது

நாம் ஒரு அறையில் தங்கப் போகிறோம். அல்லது ஒரு கழிவறை அல்லது குழியலறையை பயன்படுத்தப்போகிறோம்.

நம் மனதினுள் ஒரு சந்தேகம் வருகிறது, நாம் கண்கானிக்கப்படுகிறோமா என்று.

அத்தகைய சூழலில், நாம் முதலில் பார்க்க வேண்டியது, வித்தியாசமான் அமைப்புகள் கொண்ட ஏதாவது பொருள் இருக்கிறதா என்பதை.

அது சாம்பு குடுவையாகவோ, சோப்பு டப்பாவாகவோ அல்லது குழாயின் கைபிடியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆடை அணியும் மேசை கண்ணாடியாகக் கூட இருக்கலாம். மின் விளக்காக கூட இருக்கலாம்.

அத்தகைய பொருள்களின் முகப்பில், ஏதாவது சிறு துவாரம் இருக்கிறதா என்று கவணியுங்கள். விளக்குகள் அனைத்தையும் அனைத்துவிட்டால், இருட்டில், ஏதாவது நீல நிரத்திலோ அல்லது சிவப்பு நிரத்திலோ ஒளிர்கிறதா என்று கவணியுங்கள்.

கூர்ந்து கவணித்தால் ஒளித்து வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகள் எளிதில் அடையாளம் காணலாம்.

இல்லையேல், வித்தியாசமான் அமைப்புகள் கொண்ட அந்த பொருளின் பெயரை தேடு தளங்களில் இட்டு தேடினால், அது என்ன பொருள் என்று கண்டறியலாம்.

ஆனால், இப்படி எல்லாவற்றையும் கவணித்து வாழ வேண்டுமானால், வாழ்கையே திகில் நிறைந்த ஒன்றாகி விடும்.

அப்படியானால் வேறு என்ன செய்யலாம்?

பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிகழ்நிலை தளங்களில், RF signal detector என்று தேடுங்கள். சுமார் ரூபாய் 1000 விலையில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன.

அவற்றில் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஒளிப்படக்கருவி அல்லது அது தொடர்பான ஒன்று தான் திரட்டும் தகவல்களை ஒளிபரப்பினால், நாம் இந்த கருவி கொண்டு கண்டறியலாம்.

ஒரு சிக்கல்

இது ஒரு சிக்கல் என்னவென்றால், ஒளிபடக்கருவி, ஒளிபரப்பாமல், தானே தகவல்களை சேமித்து வைக்கிறது என்றால் இந்த கருவியால் கண்டுபிடிக்க இயலாது.

இத்தகைய சூழலில், மாற்று என்பது, நம் திறன் பேசிகளில் Hidden Camera Detector என்கிற செயலியை பதிவிறக்கி இயக்குவதுதான்.

முடிந்தவரை கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் செயலிகளை வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பு. விலை சுமார் ரூபாய் 200 முதல் 350 வரை இருக்கும்.

ஒன்றை நன்றாக புரிந்து வைத்துக்கொள்ளுங்கள், செயலி மற்றும் கருவி, இவை இரண்டும் தவறான தகவல்களையும் நமக்கு தரலாம். ஆகவே, எதையாவது கண்டறிந்தால், முதலில் அது குறித்த ஆய்வை முழுமையாக நடத்திவிட்டு பின்பு காவல் துறை உதவியை கமுக்கமாக நாடுவது சிறந்தது.

காவல்துறைக்கு, காவல் நிலையத்தில் மட்டும் புகார் கொடுக்காதீர்கள். முடிந்தவரை, மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள அலுவர் வரை தொடர்பு கொண்டு புகார் கொடுங்கள்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுப்பதும் தவறில்லை.

ஏனெனில், உள்ளூர் காவல் அலுவலர்கள், கட்டிட உரிமையாளரிடம் மாமூல் வாங்கி வந்திருக்கலாம். அதனால், உங்களுக்கு உதவுவதை விட, கட்டிட உரிமையாளருக்கு உதவுவது அவர்களின் தலையான பணியாகவும் இருக்கும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: