புவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா?

புவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா?

புவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா?

தாரகைகளை, கோள்கள் சுற்றுகின்றன. கோள்களை துணைக்கோள்கள் சுற்றுகின்றன. அப்படியானால், இந்த துணைக்கோள்களுக்கு துணை நிலவுகள் இருக்கிறதா? என்று 4 வயது சிறுவன் அறிவியலாளரை கேட்ட கேள்வி, அதன் தேடலுக்கு வழி வகுத்துள்ளது.

கார்னெசி அறிவியல் கல்வி நிறுவனம் (Carnegie Institution for Science) ன் வான் ஆய்வாளர் சூனா கொலிமியரின் நாண்கு வயது மகன் தான் மேற்சொன்ன கேள்வியை கேட்டது.

சூனா கொலிமியர் வான் ஆய்வின் ஒரு பகுதியான பால்வழி ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

தனது மகன் கேட்ட கேள்வியை, தனது கல்லூரி தோழரான சீயன் ரேமொன்ட்-டிடம் கலந்து பேசினார்.

அதன் முடிவில், ஒரு நிலவுக்கு, துணை நிலவு இருத்தல் வேண்டுமேயானால், அதன் சுற்று வட்ட பாதை அதன் கோளை விட தொலைவில் இருக்க வேண்டும்.

ஏனென்றால், அருகில் இருந்தால், கோள், துணைக்கோளின் துணை நிலவை தன்னகத்தே அதன் விசை மூலம் உள் இழுத்துவிடும்.

நமது ஞாயிறு குடும்பத்தில், இவ்வாறு துணைக்கோள்கள் தனது கோளைவிட தொலைவில் சுற்றுவது, நமது புவி கோளின் நிலா, மேலும் வியாழனின் கலிஸ்டொ என்கிற துணைக்கோள் மற்றும் காரிக்கோளின் டைடன் & லெபுடஸ் என்கிற துணைக்கோள்கள்.

தற்பொழுது, துணை கோள்களுக்கான துணை நிலவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பல வான் ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

துணை கோள்களுக்கான நிலவுகள் குறித்து நமக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால், நமது கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த தெளிவு ஏற்பட வழிவகை செய்யும்.

வான் ஆய்வாளர்கள், செவ்வாய் கோள் அளவுள்ள ஒன்று நம் புவியின் மீது மோதியதால், நமது புவியின் நிலவு பிறந்ததாக கருதுகின்றனர்.

அதே வேளையில், வியாழன் மற்றும் காரிக்கோள்களுக்கு, வளிமமும், கோள்கள் அருகே சுற்றுகின்ற தூசுகளும் சேர்ந்து துணை கோள்கள் உருவானதாக கருதுகின்றனர்.

அப்படியே துணை கோள்களுக்கு துணை நிலவுகள் இருந்தாலும், அவற்றை கண்டறிவது என்பது பல தடைகளை தாண்டிய செயலாகத்தான் இருக்க முடியும்.

இந்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பு என்னவென்றால், முதலில் நமது புவியின் நிலவிற்கு துணை நிலவு உள்ளதா என்பதை கண்டறிவது. எங்கேயாவது அது மறைந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

அப்படி ஒன்று இருந்தால், புவி மனிதர்கள் வாழ தகுதியில்லாத நிலைக்கு போனால், மனிதர்கள் அத்தகைய இடத்தில் தஞ்சம் அடையலாம்.  விண்வெளி நிலையம் என்ற கோட்பாடும் இல்லாமல் போகும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: