ஓசூர் இரு சாலை விபத்துக்களில் இருவர் பலி

ஓசூர் இரு சாலை விபத்துக்களில் இருவர் பலி

கெலமங்கலம் சீவா நகரை சேர்ந்தவர் 50 வயதாகும் சந்திரப்பா.  இவர் அப்பகுதிகளில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த நாள் இரவு, 7:00 மணிக்கு, கெலமங்கலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ட்.வி.எஸ் ஸ்டார் சிட்டி இரு சக்கர வண்டி, அவர் மீது மோதியுள்ளது.

படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கெலமங்கலம் துவக்க மருத்துவ நல நடுவத்தில் சேர்த்தனர்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த தகவல் கெலமங்கலம் காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் மருத்துவமனைக்கும், விபத்து நடந்த இடத்திற்கும் சென்று விசாரித்து வழக்கு பதிந்துள்ளனர்.

மற்றொறு சாலை விபத்தானது கோபசந்திரம் பகுதியில் நடந்தது.

ஓசூர் அடுத்த சானமாவு பகுதியை சேர்ந்தவர் சம்பங்கி, 55. இவரும் கூலித்தொழிலாளி,

கடந்த நாள் இரவு, 9:30 மணிக்கு, கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சம்பங்கி முயன்றுள்ளார்.

அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வண்டி, அவர் மீது மோதியதில், நிகழ்விடத்திலேயே உடன் நசுங்கி பலியானார்.

சூளகிரி காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: