ஓசூர் பகுதிகளில் ஆங்காங்கே வீசிச் செல்லப்படும் துப்பாக்கிகள்

ஓசூர் பகுதிகளில் ஆங்காங்கே வீசிச் செல்லப்படும் துப்பாக்கிகள்

காவல் துறையினர் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாலும், உளவாளிகளை கொண்டு அனுமதியற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை திரட்டுவதாலும், அச்சம் அடையும் பலர் ஆங்காங்கே துப்பாக்கிகளை சாலை ஓரங்களில் வீசிச் செல்கின்றனர்.

அதன் சொடர்ச்சியாக தளி பகுதியில் நீரோடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 10 நாட்டு துப்பாக்கிகளை விசிச் சென்றுள்ளனர்.  அவைகளை காவலர்கள் கைப்பற்றினர்.

தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வருவாய் வட்டத்தை சுற்றிய மலை ஊர்களில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி நடமாட்டம் பெருமளவில் உள்ளது.

இதனால், அப்பகுதி காவலர்கள் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் இணைந்து, மலை ஊர்களில் தொடர் தண்டோரா மூலம் மக்களிடம் உள்ள உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை தங்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, காவல் துறையின் நடவடிக்கைக்கு பயந்தும், ஆங்காங்கே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை, பலர் வீசி சென்று வருகின்றனர்.

கடந்த நாள் சவளகிரி - கரடிக்கல் சாலையில், ரோந்து சென்ற தளி காவலர்கள், யானைபள்ளம் நீரோடை பகுதியில், மர்ம நபர்கள் வீசிச்சென்ற, 10 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

மொத்தமாக துப்பாக்கிகள் கிடைத்ததாக பரவிய தகவலால் ஊர் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.