திருடு போன செல்லிடை பேசிகளை விரைவாக கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

திருடு போன செல்லிடை பேசிகளை விரைவாக கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

திருடு போன செல்லிடை பேசிகளை விரைவாக கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

பழைய செல்லிடை பேசிகளை விரும்பி வாங்கி பயன்படுத்துவரா தாங்கள்... கொஞ்சம் கீழே உள்ள தகவலை கவணமாக படியுங்கள்.

தொலைந்து போன அல்லது திருடு போன செல்லிடை பேசிகளை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை அடுத்த திங்களில் நடுவன் அரசு அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து நடுவன் தொலைத் தொடர்புத் துறை அலுவலர்கள் நேற்று கூறியதாவது:

இந்தியாவுக்குள் செல்லிடை பேசிகள் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, அவற்றைக் கண்டுபிக்க உதவும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

செல்லிடை பேசிகளில் இருந்து சிம் அட்டிஅயை எடுத்தாலும் அல்லது ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் கூட, அவற்றை கண்டுபிடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க, "சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ்" துறையிடம் கடந்த 2017-ம் ஆண்டு சூலை திங்கள் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி புதிய தொழில்நுட்பத்தை "சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ்" வடிவமைத்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை வெளியிடுவதற்காக நடுவன் அமைச்சரை தொலைத்தொடர்பு துறை அமைச்சக அலுவலர்கள் குழு கேட்டுக் கொள்ளும்.

எனவே, இத்தொழில்நுட்பம் அடுத்த திங்களில், அதாவது ஆகச்டு திங்களில் அறிமுகம் செய்யப்படும்.

இந்தியாவில் இதற்காக "சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி ரெஜிஸ்ட்ரர்" (சிஇஐஆர்), அதாவது "கருவிகள் அடையாள பதிவேட்டு நடுவம்" அமைக்கப்படும்.

இதன்மூலம் எந்த இணைப்பாக இருந்தாலும், செல்லிடை பேசி முடக்கப்படும்.

இவ்வாறு நடுவன் அரசு உயர் பொருப்பில் உள்ள அலுவலர் தெரிவித்தார்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: