பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய ஃபாத்திமா பாபு - பின்னனியில் திமுக தலைவர் ஸ்டாலின்???

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய ஃபாத்திமா பாபு - பின்னனியில் திமுக தலைவர் ஸ்டாலின்???

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த நிகழ்வுகளை ஸ்டார் தொலைகாட்சியின் ஒரு அங்கமான விசய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்வுகளை எல்லாம் முன்னனி நடிகரும் மக்கள் மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

விசய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு.

தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு கருவிகளும் இல்லாமல் 100 நாள்கள் குறிப்பிட்ட வீட்டில் பிற பங்கேற்பாளர்களுடன் ஒத்து வாழ்வது தான் இந்த நிகழ்ச்சியின் கொள்கை சிறப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் முதல் தொகுப்பை நடிகர் ஆரவ்வும் கடந்த ஆண்டு தொகுப்பை நடிகை ரித்விகாவும் வென்றார்கள்.

சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் பெருமளவில் இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் கூடுதல் கவனம் பெற்று தத்தமது தொழில் வலு பெறுகின்றனர்.

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தமது பணியை துவக்கி, தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து பின் வெள்ளித்திரையிலும் தோன்றிய ஃபாத்திமா பாபு இந்த  3 தொகுப்பில் முதல் பங்கேற்பாளராக அந்த நிகழ்வு நடக்கும் வீட்டில் புகுந்தார்.

அதே வேகத்தில் முதல் வெளியேற்றப்படுபவராக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதற்கு சிலர் அரசியல் பின்னனி இருக்குமோ என தத்தமது கிசு கிசுக்களை கசியவிட்டு வருகின்றனர்.

ஃபாத்திமா பாபு வெளியேற்றப்படுவதற்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?


Share this Post:

தொடர்பான பதிவுகள்: