வைகோ மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஆவலுடன் திமுக!!!

வைகோ மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஆவலுடன் திமுக!!!

நாடிற்கு எதிராக குற்றம் செய்தவர் என கடந்த சில நாட்களுக்கு முன் சிறப்பு நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்ற வை கோ மக்களவைக்கு திமுக-வினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வெற்றாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், திமுகவுக்கு 3 இடங்களும் அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

திமுகவின் 3 இடங்களில் ஒரு இடம் மதிமுகவுக்கு என ஒதுக்கப்பட்டு அதற்காக வைகோ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (சூலை 9) ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், நாட்டிற்கு எதிராக குற்றம் என்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது செவ்வாய்க்கிழமை 09.07.2019 அன்று தெரியவரும்.

மக்கள் சார்பாளர் சட்டத்தின் அடிப்படையில் வைகோவை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என சட்ட வல்லுனர்கள் கூறினாலும், நட்டிற்கு எதிராக குற்றம் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கும் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்றாக, திமுக சார்பில் ச.ரா.இளங்கோ போட்டியிட 4-ஆவது வேட்பாளராக திங்கள் கிழமை (இன்றூ 08.07.2019) வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதிமுக-விற்கு என்று கொடுத்த இடத்தில் வைகோ இல்லாவிட்டால் வேரொரு மதிமுக கட்சிக்காரர் வேட்புமனு செய்வது தானே முறை... இது தொடர்பில் வைக்கோவே வெரொருவரை முன்னிறுத்த விரும்பவில்லை என கூறப்படுகிறது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: