விஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்?

விஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்?

நடிகர் விசய சேதுபதி, தான் ஏற்கும் கதாபாத்திரத்துடன் ஒன்றித்து கதையை நகர்த்தி செல்வதில் வல்லவர்.

இன்றைய தமிழ் நடிகர்களில் அவரது நடிப்புத்திறன் குறிப்பிடத்தக்கது.

தற்போது, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி.

இதன் படப்பிடிப்பு  இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப்போதைக்கு முடிவு செய்துள்ளது படக்குழு.


முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளது தொடர்பாக விஜய் சேதுபதி, “தமிழ் மரபுவளியைச் சேர்ந்த, பார் போற்ற முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.

முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, மட்டை பந்தாட்டம் குறித்து என்னை வழி நடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.