சுருதி ஆசனுடன் சிறிது நேரம்

சுருதி ஆசனுடன் சிறிது நேரம்

நடிகர் கமலின் தலை மகள் சுருதி ஆசனுடனுன் அவர் திரைத்துரையில் பயனித்த 10 ஆண்டுகள் குறித்து சிறிய கலந்துரையாடல்.

என்ன சொல்கிறார் என்று கேட்கலாமே!

திரை துறைக்கு வந்து 10 ஆண்டுகள் வேகமாக ஓடிவிட்டது. எனது குடும்பத்தினர் மூலமாகவே சிறுவயதிலிருந்து திரைப்படம் குறித்து கற்று வருகிறேன்.

நடிகை ஆவதற்கு முன்பிருந்ததைவிட நடிகை ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

நடிப்பில் மட்டுமல்ல எனது தனிப்பட்ட சிலவற்றிலும் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

நான் ஒன்றை உங்களிடத்தில் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்கள், என்னை ஆதரித்தவர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு கடினமாக உழைப்பேன்.

ஒரு வருடம் நான் நடிப்பிலிருந்து விலகியிருந்தேன். அது என்னை நானே ஆய்வு செய்வதற்கான நேரமாக அமைந்தது.

அந்த இடைவெளி தான்  அடுத்தகட்டத்துக்கு என்னை ஆயத்த படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. " என்று சொல்லி முடித்தார்.

அவரை, அவரது காதல் வாழ்க்கை குறித்து கேட்டவுடன், எம்மை இடத்தை விட்டு வெளியேற்றினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: