தளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி

தளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி

விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் சங்கர் இயக்கவுள்ளார் என்று சில நாட்களாக வேக்மான செய்தியாக வெளிவருகின்றன.

ஓசூர் ஆன்லைன், இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து அறிந்துகொள்ள தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இந்தச் செய்தியைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம்.

மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது:

"பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படியும் ஒரு ஆண்டு நடக்கும். எனக்கு ஆதித்ய கரிகாலன் என்கிற ஆர்வமிக்க கதாபாத்திரம்.

பொன்னியின் செல்வன் என்பது என்னுடைய கதாபாத்திரம் அல்ல. அது வேறொருவருடையது.

இந்தப் படத்தில் எல்லோருக்கும் சமமான கதாபாத்திரங்கள்"  என்றார்.

அதற்கு அடுத்ததாக சங்கர் படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் வினா எழுப்பியதற்கு அவர் கூறியது:

"சங்கர், இப்போதுதான் ரசினியுடன் இணைந்து ஒரு படம் செய்துள்ளார். அடுத்ததாக விஜய்யுடன் ஒரு படம் பண்ணலாம். பிறகு நாங்கள் இருவரும் ஒரு படத்தில் மீண்டும் இணையவுள்ளோம். சங்கர் சார் எப்போதும் என்னிடம் மீண்டும் வருவார். மணி ரத்னத்துடனும் மீண்டும் படம் பண்ணுகிறேன். இரு இயக்குநர்களும் இந்தத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்" என்று கூறியுள்ளார்.

சங்கரும் விஜய்-யும் இணைந்து பணியாற்றுவது குறித்து கமுக்கம் காத்து வரும் நிலையில் விக்ரமின் இந்த நேர்காணல் அதை உறுதி படுத்துகிறது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: