நீர்த்துப் போனது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

நீர்த்துப் போனது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சட்ட வரைவு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன்னை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அச்சட்டத்தை ஒன்றுமில்லாமல் போக முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஏனெனில், முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி கல்வித் தகுதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்தான் கேள்வி எழுப்பப்பட்டது.

ரூபாய் நோட்டு திரும்பப்பெரும் நடவடிக்கையின் வங்கிகளுக்குத் திரும்பிய பணம், கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பணம் நடுவன்மத்திய அரசின் தோல்வி வெளிப்பட்டது.

அடுத்ததாக 4 கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக முதன்மை அமைச்சர் கூறிய தகவல் பொய் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்தான் மக்களுக்குத் தெரியவந்தது.

இப்படி மோடியின் தில்லுமுல்லு பரப்புரைகள் என பல ஏமாற்று வேலைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படுத்தியது.

இதனாலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒழித்துவிட மோடி முடிவெடுத்தார். இது அவரது பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

டிஆர்எஸ் கட்சி இந்த சட்ட வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச்  சட்டம், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கோரப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக அன்றைய பொழுதில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தகவல் அறியும் உரிமைச்  சட்டம் மூலமாக தகவல்களைப் பெற்றுள்ளனர்.

அரசின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது.

இச்சட்டத்தின் மூலம் நமது நாட்டின் குடியரசு தன்மை மேலும் வலுவானது.

இப்போது கொண்டுவரப்படும் சட்டத் திருத்தமானது, தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: